கரூர்: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க மேற்கூரை

கரூர்: கரூர் மாவட்டம் சுங்கவாயில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை வெயில் கடுமையில் இருந்து பாதுகாப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் கடுமையான வெயிலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக பசுமை கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் கரூர் மாவட்டதில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ள நிலையில் கரூர், … Read more

“2014-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது; அது சனாதன சுதந்திரம்” – கங்கனா பேச்சு @ இமாச்சல்

குலு: இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இந்தியாவுக்கு மெய்யான சுதந்திரம் கடந்த 2014-ல் தான் கிடைத்தது என அவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று இமாச்சலின் குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பங்கேற்றார். அப்போது மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பின்னர் ஏன் இந்தியா ‘இந்து தேசம்’ என அறிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். “நம் முன்னோர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் … Read more

விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?

நடிகர் விஜய்யின் ஒரு படத்தை பார்த்து விட்டு, நடிகர் அஜித் வெகுவாக பாராட்டினாராம். அது என்ன படம் தெரியுமா?   

பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை : காங்கிரஸ்

டெல்லி பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கடந்த சில நாட்ட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த … Read more

Geetha Kailasam: கவினோட பேசவே தோணாது.. கீதா கைலாசம் வெளிப்படுத்திய உண்மை!

சென்னை: நடிகர் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ளது ஸ்டார் படம். கவின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றி பெற்ற டாடா படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் பழகிய கதைக்களம் தான்

'அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு' – ராகுல் காந்தி

புதுடெல்லி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அம்மா என்பது பாசம், தியாகம், பொறுமை மற்றும் வலிமை ஆகிய வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு உணர்வு. அன்னையர் … Read more

பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

லைசன்ஸ் கேட்ட காவலரிடம் சைலன்ட்டாக சட்டையை இறக்கி காண்பித்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க், அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த … Read more

Dhoni: `என்றென்றும் அன்புடன் உங்கள் தோனி!' – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பரிசளித்த தோனி!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொண்டிருந்தது. போட்டியை வென்று முடித்தவுடன் தோனி மற்றும் சென்னை அணியின் வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறி பரிசளித்து மகிழ்ந்தனர். ராஜஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டிதான் சேப்பாக்கத்தில் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தோனியிடமிருந்து ஓய்வு குறித்து ஏதேனும் … Read more

“எம்ஜிஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைக்கிறார் விஜய்” – செல்லூர் ராஜூ

மதுரை: எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைக்கிறார் நடிகர் விஜய், என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சியினர் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் 3 ஆண்டு சாதனையை அக்கட்சியின் தலைவர்கள்தான் கொண்டாடுகின்றனர். மக்கள் கொண்டாடவில்லை. திமுக ஆட்சி கூமுட்டையாய் போய்விட்டது. … Read more