“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது” – அமித் ஷா @ உ.பி

லக்னோ: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோசாம்பி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோத் சோங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் தெரிவித்தது. “பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளதால் அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யரும், ஜம்மு காஷ்மீரின் ஃபாரூக் அப்துல்லாவும் தெரிவித்துள்ளனர். அதோடு … Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்! 3 பேர் கைது

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது, உயிரிழந்த பெண் யார் ? அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறல்,  

தேர்தலையொட்டி 10 உத்திரவாதங்களை வெளியிட்ட கெஜ்ரிவால்

டெல்லி மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 19-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இன்று, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டெல்லி … Read more

காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது.. மோசமடையும் பாலஸ்தீனர்களின் நிலை! ஐநா கவலை

காசா: ராஃபாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐநா தெரிவித்திருக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. Source Link

Actor Vikram: தென்காசியில் துவங்கிய சூட்டிங்.. வீர தீர சூரன் படத்தின் க்யூட் புகைப்படம்!

தென்காசி: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்தது, இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தயாராகி ஆனால் ரிலீசாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப் படங்களின்

டெல்லியில் அதிர்ச்சி: ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்த டாக்டர் கொடூர கொலை

புதுடெல்லி, டெல்லியின் தென்கிழக்கே ஜாங்கிபுரா பகுதியில் வசித்து வந்த மூத்த டாக்டர் யோகேஷ் சந்திரபால் (வயது 63). வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள ஏழைகளிடம் காசு வாங்காமல் இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். அவர்களுக்கு மருந்துகளையும் காசு வாங்காமல் கொடுத்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி நீனா பால், டெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள்களில் ஒருவர் கனடா நாட்டிலும், மற்றொரு மகள் நொய்டாவிலும் வசித்து வருகின்றனர். … Read more

சென்னை அணி அபார பந்துவீச்சு…142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

சென்னை, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை … Read more

கொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

பியாங்க்யாங், கொரிய தீபகற்பத்தில் தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்துகின்றது. இந்தநிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய மல்டிபிள் ராக்கெட் ஏவுகணை சோதனையை வடகொரிய ராணுவம் நடத்தியது. வடகொரியாவின் இந்த சோதனை … Read more

Ruturaj Gaikwad : 'ஈஸியா ஜெயிப்போம்னு நினேச்சேன். ஆனா…' – ருத்துராஜ் விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை அணியும் வென்றிருக்கிறது. சென்னை அணியின் சார்பில் சிமர்ஜித் சிங் நன்றாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார். போட்டிக்குப் பிறகு சென்னை … Read more

400+ இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி: வானதி சீனிவாசன் நம்பிக்கை 

கோவை: “400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மக்கள் முறியடிப்பார்கள்” என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மக்கள் முறியடிப்பார்கள். இதுவரை மூன்று கட்ட வாக்குப் … Read more