டாடாவின் நெக்ஸானை விட XUV 3XO எஸ்யூவியில் உள்ள சிறந்த வசதிகள்

4 மீட்டர் எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 3XO காருக்கு போட்டியாகவும் இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் விளங்குகின்ற டாடா நெக்ஸான் காரை விட கூடுதலாக இந்த மாடல் பெற்றுள்ள வசதிகளின் விபரத்தை அறிந்து கொள்ளலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாதம் தோறும் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நெக்ஸான் கார்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இந்த மாடலுக்கு மிக ஒரு கடுமையான சவாலினை … Read more

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் – கனேடிய உயர்ஸ்தானிகர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் நேற்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆளுநர், … Read more

ஆள் தேவையில்லை… ரிமோட் மூலமாக தேங்காய் பறிக்கலாம்… பல்கலைக்கழகம் உருவாக்கிய `பலே' கருவி!

தேங்காய் விவசாயிகள் தென்னை மரம் வளர்ப்பதை விட அதில் இருந்து தேங்காய் பறிப்பதில்தான் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சிலர் தேங்காய் பறிப்பதற்கு பதில் தானாக விழும் தேங்காய்களை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க தொழிலாளர்கள் கணிசமான தொகை கேட்கின்றனர். அப்படி கொடுத்தாலும் சில நேரங்களில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோவாவில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவா பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய கடற்கரையோர விவசாய ஆராய்ச்சி … Read more

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஏப்.19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இறுதிகட்ட தேர்தல் நாளை மறுநாள்(ஜூன் 1) நடைபெற உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவானவாக்குகள் அடங்கிய மின்னணுஇயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாடு … Read more

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது

நியூயார்க்: இந்திய ராணுவ அதிகாரி மேஜர்ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது. ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா … Read more

சரக்கு அடித்துவிட்டு அஞ்சலியிடம் தகாத முறையில் நடந்தாரா பாலகிருஷ்ணா?.. சர்ச்சை வீடியோ

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் பாலகிருஷ்ணா. பாலைய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றும் சர்ச்சையை சந்திப்பவை. அதேபோல் அவரது படங்களில் வரும் காட்சிகளும் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகுபவை. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் செய்திருக்கும் செயல் ஒன்று பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவும் சமூக

`பாடநூல்களில் திராவிட இயக்க ஆதிக்கம்!' – ஆளுநர் ரவியின் பேச்சும் பின்னணியும்!

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்ட்டின் தொடக்க நாளில் பேசியபோதே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “கட்ந்த 2021-ம் ஆண்டு நான் தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற போது, மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமால் தனித்தனியாக செயல்படுவதையும் கவனித்தேன். இதனால், தரத்தை மேம்படுத்த முடியாமல் பல சவால்களை பல்கலைக்கழகங்கள் எதிர்கொண்டு … Read more

ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: தாம்பரத்தில் விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் நாளை ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் கடந்த ஏப்ரல் மாதம் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்தவகையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்திய பறக்கும் படையினர், 3 பேரிடம் … Read more

சீன படையெடுப்பு பற்றி சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் மணி சங்கர் ஐயர்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார். அதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா மீது சீனா படையெடுத்தது என்று நேரடியாக சொல்லாமல், படையெடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது என்று அவர் பேசினார். அப்படியானால், இந்தியா மீது சீனா கடந்த 1962-ம்ஆண்டு படையெடுக்கவில்லை என்ற … Read more

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் விருப்பம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அடிக்கடி வாழ்த்து தெரிவித்து வருபவர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி. இந்நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: தற்போது இந்தியாவில் நடந்து வரும் மக்களவைத் … Read more