எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன்? திமுக அமைச்சர் சொன்ன தகவல்!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.  

CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!

CSK vs RR: இன்று இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் கடைசி ஹோம் கேமில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வரும் MS தோனிக்கு இதயப்பூர்வமான கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளது. எம்.எஸ். தோனி காயம் அடைந்திருந்தாலும், உண்மையான தலைவரைப் போல வலியை தாங்கி போராடி வருகிறார் என்று கூறியுள்ளது. “வயது … Read more

வைகை ஆற்றில் தொடரும் வெள்ளம் : இணைப்பு சாலைகள் துண்டிப்பு

மதுரை தொடர்ந்து 2 ஆம் நாளாக வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நேற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கவோ, … Read more

அரசியலுக்கு அடித்தளம் இடுகிறாரா சூர்யா.. நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த திட்டம்!

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில் ஆங்காங்கே பல ஊர்களில் ஏழை எளியவர்களுக்கு பல நல்ல உதவிகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி

வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியா பெங்களுரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ளார். இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். … Read more

`கிஃப்ட் தர்றேன் வா' – இளம்பெண்ணின் கழுத்தை இறுக்கிய நைலான் கயிறு… `கொலை'யில் முடிந்த தகாத உறவு!

திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையான கொடைரோடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரை ரோந்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவில் சந்தேகத்திற்குரிய வகையில் ரோட்டோரத்தில் நின்றிருந்த காரை சோதனையிட்டனர். அந்த காரில் பெண் சடலம் இருந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வருவதால், கார், சடலத்தை மீட்டு காரில் வந்த 2 இளைஞர்களையும் அம்மையநாயக்கனூர் போலீஸாரிடம் ஒப்படைத்துச் சென்றனர். காவல் நிலையம் இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீஸார், காரில் … Read more

தொடரும் மழையால் தணிந்த வெப்பம்: மதுரையில் பல இடங்களில் சிக்கிய வாகனங்கள்

மதுரை: மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தேங்கிய நீரில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. கடந்த சில நாட்களாக மதுரை நகர், புறநகர், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. மதுரை நகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால் மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோடு பகுதியில் மின்சாரக் கம்பி அறுந்து … Read more

2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்: ம.பி.யில் காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சைக்குரிய வாக்குறுதி

புதுடெல்லி: இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமதியாகக் கிடைக்கும் என்று மத்தியபிரதேச மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நியாயப்பத்திரம் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்காக மஹாலஷ்மி யோஜ்னா எனும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஏழைப்பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து … Read more

IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மே 10 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2024 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு சென்றது. அதாவது, இப்போது பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர மற்ற எல்லா அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி … Read more

ஜியோ 1000GB டேட்டா 50 நாட்கள் இலவசம்.. 500Mbps வரை வேகத்தில் Netflix பார்க்கலாம்! சூப்பர் பிளான்

நீங்கள் வீட்டிலேயே அதிவேக இணையத்தை அனுபவிக்க விரும்பினால், ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஏர் ஃபைபர் சேவை உங்களுக்கு சிறந்தது. இதில் நீங்கள் பல்வேறு வகையான திட்டங்களைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், நீண்ட செல்லுபடியாகும் மற்றும் வேகமான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம் கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், விருப்பங்களுக்கு பஞ்சமில்லாத வகையில் பல திட்டங்கள் இருக்கின்றன. 100Mbps முதல் 500Mbps வரையிலான வேகத்தில் பயனர்களுக்கு வலுவான வருடாந்திர திட்டங்கள் ஜியோவில் இருக்கின்றன. இந்தத் திட்டங்களின் வருடாந்திர … Read more