மேட்டூரில் பலத்த காற்றுடன் கனமழை: மரம் விழுந்து அரசுப் பேருந்து சேதம்

மேட்டூர்: மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன், பலத்த காற்றுடன் பெய்த மழையால், சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்து அரசுப் பேருந்து மீது விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், இரவில் இடி மின்னல் மற்றும் பலத்த … Read more

“இந்திரா காந்தியின் தைரியத்தை பிரதமர் மோடி உள்வாங்க வேண்டும்” – பிரியங்கா காந்தி

நந்தூர்பார் (மகாராஷ்டிரா): தைரியம், உறுதிப்பாடு ஆகிய பண்புகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உள்வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பேசினார். மகாராஷ்டிராவின் நந்தூர்பார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வதேரா, “வெற்றுப் பேச்சுக்களை நரேந்திர மோடி பேசி வருகிறார். அவரது பேச்சில் எந்த கனமும் இல்லை. தைரியம், உறுதிப்பாடு ஆகிய பண்புகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து … Read more

என்னை கவர்ந்த தம்பிகளுக்கு வாழ்த்துகள்.. தனது அடுத்த பட இயக்குநர்களை புகழ்ந்த கமல் ஹாசன்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய

ஜெயக்குமார் தனசிங் குடும்பத்தினரிடம் ப.சிதம்பரம் நேரில் ஆறுதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மர்மமாக உயிரிழந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ம் தேதி மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று … Read more

இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்க மோடி முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பிரதமர் மோடி அடுத்த முறை இந்தியாவில் ஆட்சி அமைப்பது மிகவும் கடினம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். பிஹாரில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, “மோடி தெலுங்கானாவுக்கு அருகில் இருந்தபோது நான் ஆந்திராவில் பேரணிகளில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த காலத்தில் அவரது பேச்சில் இருந்த பெருமை தற்போது தென்படவில்லை. மூன்று கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மோடி மீண்டும் பிரதமராவது மிகவும் கடினமாக இருக்கும் என்று … Read more

14-ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவு – 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பம் 

சென்னை: தமிழ்நாட்டில், 14-ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், நேற்று வெளியான  10-ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை த் தொடர்ந்து, தேர்ச்சி பெறாதவர்கள்  துணைத் தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பம்  செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த  ஏப்ரல் 6ந்தேதி அன்று  பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த … Read more

Suriya: சூர்யா 44 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.. 80% சூட்டிங் எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணையவுள்ள சூர்யா 44 படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க

கொல்கத்தா – மும்பை போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

கொல்கத்தா, 17-வது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்து … Read more

அமெரிக்காவில் கொடூரம்: இரவில் சாலையில் பெண்ணை தாக்கி, காருக்கு பின்னால் இழுத்து பலாத்காரம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட பெருநகர பகுதி பிரான்க்ஸ். 45 வயது பெண் ஒருவர் அந்த வழியே பின்னிரவு 3 மணியளவில் சாலையோரம் நடந்தபடி சென்றார். அப்போது, மர்ம நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். வெள்ளை துணியால் முகம் தெரியாதபடி மறைத்து கொண்ட அந்நபர், கையில் இருந்த பெல்ட்டால் அந்த பெண்ணின் கழுத்து பகுதியை சுற்றி திடீரென வீசி, அவரை இழுத்துள்ளார். இதில், அந்த பெண் கீழே விழுந்ததும் தரதரவென அவரை அந்நபர் இழுத்து … Read more

2024 மாருதி ஸ்விஃப்ட் Vs பலேனோ: எந்த காரை தேர்வு செய்யலாம்.?

2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு பல்வேறு போட்டியாளர்கள் இருந்தாலும் கூட தனது சொந்த மாடல்களே போட்டியாளர்களாக அமைந்திருக்கின்றது. மாருதி சுசூகி நிறுவனத்திடம் உள்ள பலேனோ, வேகன் ஆர் மற்றும் மாருதி தயாரிக்கின்ற டொயோட்டாவின் கிளான்ஸா போன்ற மாடல்கள் சவாலாக உள்ளன. இந்த தொகுப்பில் நாம் மாருதியின் பலேனோ மற்றும் புதிய 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்விஃப்ட் என இரு மாடல்களை ஒப்பிட்டு எவ்வாறு இந்த மாடல்களுக்கு உள்ள வித்தியாசம் அமைந்திருக்கின்றது. விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை … Read more