ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 2 அணிகள் யாரையும் தக்க வைக்க போவது இல்லை!

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும். இந்த சமயத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் ஐபிஎல்லில்  நுழைந்தது. … Read more

1000 பெண்கள் டார்கெட்.. மலையாள நடிகரின் விவகாரமான வேலை..வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

சென்னை: மலையாள சினிமாவில் டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் அந்த நடிகர். இவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று தான் இருப்பார் என்பது மாலிவுட் சினிமா வட்டாரத்திற்கு தெரிந்த கதை தான் என்றாலும், தற்போது அந்த மாஸ் நடிகரின் மானம் அக்கட தேசத்திலும் போய் கொண்டு இருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபலமான இவருக்கு என்று

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி இன்று முதல் தியானம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் 3 நாட்கள் தவமிருந்த பாறையில் பிரதமர் மோடி இன்றுமுதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களவை இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, மக்களவை தேர்தல் முடியும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் … Read more

வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தும் முக்கிய நபர் கைது: என்ஐஏ நடவடிக்கை

புதுடெல்லி: வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தி வரும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது. வங்கதேச மக்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோர் வடகிழக்குமாநில எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்து, நாட்டின் பலபகுதிகளில் வேலைக்கு அமர்த்தும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்த மனித கடத்தல் தொழிலை தடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இறங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 33 பேர் கைது செய்யப்பட்டனர். … Read more

தலைமைச் செயலகம் ஷூட்டிங்கில் ஸ்ரேயா கேட்ட கேள்வி! 1000 இடையூறு! இயக்குனர் வசந்த பாலன் திடீர் போஸ்ட்

சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5-யில் வெளியான தலைமைச் செயலகம் வெப் சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் வசந்தபாலன் தமிழ் தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி குறித்து பதிவு போட்டு வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஜி5க்காக இயக்குனர் வசந்தபாலன் எழுதி,

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாறி வருகிறது தமிழகம்: அரசு பெருமிதம்

சென்னை: சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் விளையாட்டுத் துறையிலும் தமிழகம் இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்கப்படுவதுடன், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் இத்துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு … Read more

“ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அக்னிபாத் திட்டம் பற்றி ராகுல் பேசட்டும்” – வி.கே.சிங் பதிலடி

ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசட்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி கடைசி மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு … Read more

சூர்யா 44 படத்தின் வில்லன் இவரா? செட்டாகுமா? படக்குழு கொடுத்த அப்டேட்!

சென்னை: சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 44வது திரைப்படத்தினை ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றப்படத்தை கொடுத்த சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து

45 மணி நேரம், நீர் ஆகாரம் மட்டும்… – குமரியில் மோடியின் தியானத் திட்டமும், சில தகவல்களும்!

நாகர்கோவில்: பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நாளை (மே 30) முதல் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதேபாறையில் 3 நாள் தவமிருந்த 142 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மோடி தியானம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை உடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் … Read more

“அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” – கார்கே விமர்சனம்

இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இந்தத் திட்டம் தொடர்பாக எங்களிடம் மூன்று கேள்விகள் உள்ளன. … Read more