மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை… சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?

Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே… சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு…?

CSK vs RR Match Preview: 17ஆவது ஐபிஎல் தொடரின் லீக் (IPL 2024) சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு லீக் போட்டியின் வெற்றியும் தோல்வியும் பல அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகளை தீர்மானிக்கும் எனலாம். இன்று நடக்கும் லீக் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தொடரில் இருந்து வெளியேறி 9வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இருப்பினும் இந்த போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது.  தொடர்ந்து சென்னை … Read more

உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனையை FSSAI அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றம்

உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம் போதுமான சோதனையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பகல் நேர, முழு நேர உணவகங்களை விட இரவு நேர, துரித உணவகங்கள், சாலையோர கடைகள் வீதிக்கு இரண்டு உரிமத்துடன் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாலை 5 மணிக்குப் பின் எந்தவொரு சோதனையும் நடப்பதாக … Read more

நான் கூப்பிட்டா விருந்து வைக்கமாட்ட.. அவனுக்கு வைப்பியா?.. நடிகையை டார்கெட் செய்து தூக்கிய அதிகாரி?

சென்னை: அந்த நடிகை கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள்வரை பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர் இப்போது திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவரைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு ஓய்வு என்பதே இன்னமும் இல்லை. சூழல் இப்படி இருக்க அவர் பற்றிய புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில்

'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும் – யோகி ஆதித்யநாத்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் அக்பர்பூர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் எனக்கூறி மக்களை அச்சுறுத்தி வரும் அதே காங்கிரஸ் கட்சிதான், அரசியலமைப்பில் மாற்றம் செய்து மக்களின் பேச்சுரிமையை நசுக்கியது. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும். பிரதமர் மோடி சர்வதேச … Read more

பத்ம பூஷண் விருதை, விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பிரேமலதா

சென்னை, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2-ம் கட்ட … Read more

ஆப்கானிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநாவின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் … Read more

நான்கு பல்சர் என்எஸ் பைக்குகளின் வித்தியாசங்கள், ஆன்ரோடு விலை ஒப்பீடு

பஜாஜ் ஆட்டோவின் 11வது மாடலாக பல்சர் வரிசையில் வந்துள்ள NS400Z உட்பட மற்ற NS125, NS160, NS200 என நான்கு மாடல்களை ஒப்பீடு செய்து வித்தியாசங்கள் முக்கிய வசதிகள் உட்பட தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம். நேக்டூ ஸ்போர்ட் ரக பைக்குகளில் பொதுவாக பெரிமீட்டர் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டு NS125, NS160, மற்றும் NS200 என மூன்றும்  ஏறக்குறைய ஒரே மாதிரியான ஒற்றுமையை கொண்டிருக்கும் நிலையில் NS400Z மாடலும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் சிறிய மாற்றத்தை ஹெட்லைட் … Read more

ஆட்டோவில் வந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட டிரைவர்; போக்சோ வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 10-ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்த 25 வயது ஆட்டோ டிரைவர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, கடந்த புதனன்று மனேவாடா அருகே உள்ள ஓம்கார் நகரில் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. அன்று, பள்ளியிலிருந்து சிறுமியை வழக்கமாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் வந்தார். சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட டிரைவர், திடீரென ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார். போக்சோ … Read more

“அரசின் செயலின்மை” – புதுச்சேரி 10-ம் வகுப்பு முடிவுகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் சிவா விமர்சனம்

புதுச்சேரி: “புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவின் பின்னடைவு, அரசின் செயலின்மையைக் காட்டுகிறது” என்று அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலம் கல்விக்கு முதலிடம் கொடுத்த மாநிலம் என்று பெயர் பெற்றது. இந்தியாவிலேயே 100 சதவீதம் எழுத்தறிவு உள்ள மாநிலமாக 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிப்பு செய்யப்பட்ட மாநிலம் புதுச்சேரி. புதுச்சேரியில் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் அபரிவிதமான மதிப்பெண்களை பெற்று, குறிப்பாக … Read more