“மோடிதான் நாட்டை வழிநடத்துவார்” – ‘புதிய தலைமை’ குறித்த கேஜ்ரிவால் கருத்துக்கு அமித் ஷா பதிலடி

ஹைதராபாத்: “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2029 வரை பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டை வழிநடுத்துவார்” என்று கேஜ்ரிவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா கூறினார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷாதான் பிரதமராவார்” என கூறி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹைதராபாத்தில் … Read more

'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்… பொது விவாதத்திற்கு நான் தயார்' – ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்

Rahul Gandi Reply For Open Debate Invitation: ஊடகவியலாளர் என்.ராம் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..

Actor Vijay 10th Mark : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றார் என்பது உங்களுக்கு தெரியுமா?   

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்… 'ஒத்துழைக்காத காவல்துறை' – பொங்கிய பிரேமலதா!

Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார். 

ரசவாதி விமர்சனம்: மனநல பிரச்னையைப் பேசும் க்ரைம் கதையில் இத்தனை வாட்ஸ்அப் பார்வேர்டு மெசேஜ்களா?

கொடைக்கானலிலுள்ள சித்த மருத்துவராக இருக்கும் சதாசிவ பாண்டியனுக்கும் (அர்ஜுன் தாஸ்), அதே ஊரிலுள்ள ஓர் உணவகத்தின் மேலாளராக பணிக்குச் சேரும் சூர்யாவுக்கும் (தன்யா ரவிசந்திரன்) காதல். இந்தச் சூழலில் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று வரும் காவல் ஆய்வாளர் பரசுராஜ் (சுஜித் சங்கர்) இவர்களின் காதலைப் பிரிக்க நினைக்கிறார், அர்ஜுன் தாஸைக் கண்டாலே வெறுக்கிறார். அவரின் செயலுக்கான காரணம் என்ன, இவர்கள் மூவரின் பின்னணி என்ன என்பதை பிளாஷ்பேக் குவியல்களால் பேசி இருக்கிறது இந்த `ரசவாதி’. … Read more

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்… முன்னாள் நீதிபதிகளின் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்

வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் திறந்த விவாதம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் நேற்று … Read more

சிவாஜிக்கு பிறகும் மோகன்தான்.. வேறு யாரும் இல்லை.. பாக்யராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: மைக் மோகன் என்று ரசிகர்களாள் அழைக்கப்படுபவர் மோகன். வெள்ளி விழா நாயகன் என்றும் இவரை ரசிகர்கள் அழைப்பார்கள். முக்கியமாக மோகனின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருப்பவை. அந்தப் பாடல்களுக்கு நடனமே பெரிதாக ஆடாமல் தனது முக பாவனைகளால் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் வல்லமை உடையவரும் அவர். மோகன் இப்போது GOAT படத்தின் மூலம்

பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என கூறி நாட்டை அச்சுறுத்தியது காங்கிரஸ் கட்சி: பிரதமர் மோடி

புல்பானி, ஒடிசாவின் புல்பானி நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வந்துள்ளது. அதனால், மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சாதனை படைக்கும் என்று பேசியுள்ளார். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பேசியது போன்றே நடப்பு 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் இளவரசர் (ராகுல் காந்தியை குறிப்பிட்டு) பேசி வருகிறார். இந்த தேர்தலில், … Read more

பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பே பி.எஸ்.ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பி.எஸ்.ஜி.அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பி.எஸ்.ஜி.அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக … Read more

பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம்

வாஷிங்டன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இந்த சூரிய புயலை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் ஒளிக் காட்சிகளாக பார்க்க முடிந்தது. இந்த சூரிய புயல் காரணமாக, தொலைத்தொடர்பு, மின் விநியோகம், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சூரிய புயல் தொடர்பான புகைப்படங்கள் தற்போது … Read more