சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!

Chennai Super Kings IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் 12 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.  மறுபுறம் முதலிரண்டு இடங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டன. எனவே மூன்றாம், நான்காம் இடங்களுக்குதான் … Read more

கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற டெம்போ கட்டுப்பாடின்றி கவிழ்ந்து விபத்து…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கட்டுக்கட்டாக பணம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது. கிழக்கு கோதாவரி நல்லஜர்ல அருகே அனந்தப்பள்ளி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த மினி லாரி கவிழ்ந்தது. இதில் அட்டை பெட்டி மற்றும் சாக்கு மூட்டைகளில் கொண்டு சென்ற பணம் சிதறி விழுந்ததை அடுத்து அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி போலீசார் விரைந்து வந்து லாரியில் இருந்த ரூ. 7 கோடி பணத்தை கைப்பற்றினர். … Read more

Mohan: GOAT படம் குறித்த கேள்வி.. பதிலளித்த நடிகர் மோகன்.. அட இப்படி ஒண்ணு இருக்கா!

சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். இதன் விமான நிலைய வீடியோக்கள் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் வரும் 15 ம் தேதிக்குள் இந்த படத்திற்கான தன்னுடைய போர்ஷன்களை விஜய்

2024 இறுதிக்குள் மூன்று பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர முடியும் – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200% மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய … Read more

Mbappé: "ஒரு அணியுடன் நீண்டகாலமாக இருந்துவிட்டு வெளியேறுவது என்பது…" – PSG அணி குறித்து எம்பாப்பே

PSG அணியிலிருந்து விலக இருப்பதாக கிலியான் எம்பாப்பே அறிவித்திருக்கிறார். 25 வயதான பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வே PSG (பாரிஸ் செயிண்ட் – ஜெர்மைன்) அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணிக்காக இதுவரை 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்திருக்கிறார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்களைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு PSG அணியிலிருந்து வெளியேற … Read more

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியீடு

சென்னை: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது. https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் … Read more

இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலே இந்த தேர்தல்: அமித் ஷா பேச்சு

செவெல்லா(தெலங்கானா): இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலே இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் செவெல்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்த தேர்தல் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலும்கூட. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம். ராகுல் காந்தி தலைமையில் இண்டியா அணி மற்றொரு பக்கம். நாட்டில் … Read more

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

Kalvan Movie OTT Release : ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா நடித்திருக்கும் கள்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ். இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு விவரம்!

ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?

கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.   

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் பெரியார் நகரில்  கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. கொளத்தூர் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து அதற்கான அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி,  ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்த  மருத்துவமனையின் தரைத் … Read more