தேர்தல் ஆதாயத்துக்காக மத ரீதியாக பேசுவதை தேர்தல் ஆணையம் கண்டிக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு ஆபத்தானது : நீதிபதி ஜோசப்

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது அரசியல் சாசனத்துக்கு கேடு விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட “மாறும் இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம்” என்ற தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற … Read more

50 வயது காதலியை கழட்டி விட்ட அர்ஜுன் கபூர்.. பிரேக்கப் தான் ஒரே தீர்வு.. மலைகா அரோராவும் முடிவு?

மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தனது காதலி மலைகா அரோராவுடன் படு நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில், திடீரென இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரே படத்தில் ஷாருக்கானுடன் தக்க தையா தையா பாடலில் குத்தாட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை மலைகா

ஜம்மு காஷ்மீரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; விமான சேவை பாதிப்பு

ஸ்ரீநகர், ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் ‘ஏர் விஸ்தாரா’ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். அந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். டெல்லியில் இருந்து ‘ஏர் விஸ்தாரா’ விமானம் … Read more

டி20 உலகக்கோப்பை; பாபர் அசாம் இந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் – சோயப் மாலிக்

கராச்சி, டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் … Read more

இன்று (31) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையில் திருத்தம்.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர்  டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் … Read more

தன் சகோதரனைத் திருமணம் செய்துகொண்ட காதலி; 5 வயது குழந்தை உட்பட மூவரைக் கொன்று, இளைஞர் வெறிச்செயல்!

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் வசந்தா (28). தனது கணவரைப் பிரிந்துவிட்ட இவர், கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், ஹொசலிங்கபுரத்தில், தாய் ராஜேஸ்வரி (50), மகன் சாய் தர்மதேஜ் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த வசந்தாவுக்கு கர்நாடகாவின் ஹோஸ்பேட்டையில் வசிக்கும் ஆசிப் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் திருமணம் மீறிய உறவாக அது மாறியிருக்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஆசிப்-பின் அண்ணன் ஆரிப் … Read more

குப்பை அகற்றப்படாததை சுட்டிக்காட்டிய இளைஞர் மீது தாக்குதல்: கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு @ கோவை

கோவை: கோவையில் குப்பை அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் கவுதம் மீது தாக்குதல் நடத்தியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த கவுதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை தேங்கி, … Read more

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி: ஓபன் ஏஐ குற்றச்சாட்டு

புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டாய்க் (STOIC) என்ற அரசியல் பிரச்சார மேலாண்மை நிறுவனம் ஒன்று … Read more

அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?

Premalu Actor Naslen Joins Ajith Kumar : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் திரைப்பத்தில் பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

வெடிகுண்டு மிரட்டலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சேவைகள் பாதிப்பு

ஸ்ரீநகர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் சேவைகள் பாதிக்கப்ப்ட்டுள்ளன. இன்று மதியம் ஶ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து ஶ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் ‘ஏர் விஸ்தாரா’ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்துள்ளனர். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு … Read more