ஹீரோயின்களுக்கு முத்தம் தரமாட்டேன்.. சபதம் போட்ட சல்மான் கான்.. ஒரு நடிகையிடம் சறுக்கியது தெரியுமா?

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான், தனது படங்களில் ‘முத்தம் வேண்டாம்’ என்ற கொள்கையை வைத்திருப்பவர். காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஜ்லானி மற்றும் கத்ரீனா கைஃப் போன்ற முன்னணி நடிகைகளுடன் பணிபுரிந்த காலத்தில் கூட அவர் இந்த விதியை கடைபிடித்துள்ளார். ஆனால், 1996ல் வெளியான ஒரு படத்தில் இந்த விதியை உடைத்து

All Eyes On Rafah: `ஐ.நா சபையின் ஆன்மா காஸாவில் இறந்துவிட்டது!' – ஐ.நா-வை சாடும் துருக்கி அதிபர்

இஸ்ரேலின் கொடூர செயலால் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் பாலஸ்தீனத்தின் ராஃபா மீது விழுந்திருக்கிறது. இதற்கு காரணம், கடந்த அக்டோபர் முதல் 8 மாதங்களாக பாலஸ்தீனத்தில் பொதுமக்களையும் பொருட்படுத்தாமல் போர் நடத்தி வரும் இஸ்ரேல், போர் காரணமாக பாதுகாப்பான இடமென்று ராஃபாவில் (Rafah) மக்கள் தங்கியிருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதே. ஹமாஸைச் சேர்ந்த சில தலைவர்கள் இந்தத் தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறும் இஸ்ரேல், தவறுதலாக முகாம்கள் மீது குண்டுகள் விழுந்துவிட்டதாகக் கூறுகிறது. All Eyes On Rafah … Read more

தேர்தல் நடத்தை விதிகளால் முன்னாள் ராணுவ வீரர் உடலை தானம் பெற மறுத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி – உறவினர்கள் போராட்டம்

மதுரை: உடல் தானம் செய்வதாக பதிவு செய்திருந்த, இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தானம் பெற மறுத்தது. இதனால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் … Read more

‘கொதிக்கும்’ டெல்லி: வரலாறு காணாத அளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலமை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி முன்கேஸ்பூர் பகுதியில் இந்த அளவுக்கு கடுமையான … Read more

விவாகரத்து செய்தால், ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவுக்கு 70% சொத்து போகுமா? \"பிரியமானவளே\" அக்ரிமென்ட்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான, மனைவி நடாசா ஸ்டான்கோவிச் ஆகியோர் விவாகரத்து செய்ய உள்ளதாக உலா வரும் வதந்திகளுக்கு மத்தியில், நடிகர் விஜய், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில், 2000-மாவது ஆண்டில் வெளியான “பிரியமானவளே” என்ற படத்தில் இடம் பெற்ற திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம்

சொத்து பிரச்னை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் மரணம், மற்றொருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரின் மகன் கருப்பையா(வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணேசன் குடும்பத்தினரும், மைலி பகுதியை சேர்ந்த பாலமுருகன் குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில், கணேசன்-பாலமுருகன் இருவரின் குடும்பத்தினருக்கும் நீண்டகாலமாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சொத்து பிரச்னை காரணமாக கணேசனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்ததாக … Read more

‘கோமா’ நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: ‘கோமா’ நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவர் சிவகுமாருக்கு சொந்தமான சொத்துகளை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, கணவர் ‘கோமா’ நிலையில் இருக்கும் நிலையில் அவருடைய சொத்துகளை கையாள மனைவியை பாதுகாவலராக நியமிக்கக் கோரும் … Read more

ராமர் கோயிலால் சரிவிகிதத்தில் சாதக, பாதகம்: ஃபைசாபாத் தொகுதியை பாஜக மீண்டும் வெல்லுமா?

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் ஆதரவை ராமர் கோயில் பெற்று தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தி பகுதி ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மே 20-ம் தேதி நிறைவடைந்தது. இங்கு மீண்டும் பாஜக வெல்லுமா? அதற்கான வாய்ப்புகள் என்ன? தொகுதி நிலவரம் என்ன? – உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு … Read more

நீங்க உள்ளே வராதீங்க.. நிருபரை பார்த்து டென்ஷனான விஜய்யின் அம்மா.. திடீர்னு என்ன ஆச்சு!

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி  ஷோபாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, விஜய்யின் அம்மா, பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வந்ததால், உள்ளே வரக்கூடாது என்று திடீரென அவர்களை பார்த்து கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகராக இருக்கும் 

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியுடன் இணைந்த துணை கேப்டன்

நியூயார்க், 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது … Read more