சிறையில் 6 ஆயிரம் நாட்கள்… உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர்

நியூயார்க், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்தவர். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்து விட்டார். இந்த துக்கத்தில் ஹென்றி மதுபானம் குடிக்க தொடங்கினார். அவர் முறையாக எந்த அலுவலகத்திலும் பணியாற்றியதில்லை. ஒரேயொரு முறை மோட்டல் ஒன்றில் வேலை … Read more

யெஸ்டி அட்வென்ச்சரில் மவுன்டெயின் பேக் ஆக்சசெரீஸ்

விற்பனையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் முன்பாக ரூ.17,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த மவுன்டெயின் பேக் (Mountain Pack accessories) தற்பொழுது அடிப்படை அம்சமாக சேர்க்கப்பட்டாலும் விலையில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து ரூ.2.16 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்ரி கேன், மெயின் கேஜ், நக்கிள் கார்ட்ஸ், பார் எண்ட் வெயிட்ஸ், ஹெட்லேம்ப் கிரில் மற்றும் க்ராஷ் கார்டு ஆகியவை Mountain Packல் உள்ளது. மற்றபடி, வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை. இந்த அட்வென்ச்சரில் … Read more

Honey Trap சோனியா: ஆசை வார்த்தை… கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு; சென்னை `பகீர்' சம்பவத்தின் பின்னணி!

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதின் (32). இவர் சென்னை பாரிமுனை பகுதியில் செல்போன், லேப்டாப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 17-ம் தேதி தொழிலதிபர் ஜாவித் சைபுதினுக்கு ஒரு செல்போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், `இன்றைக்கு இரவு 9 மணிக்கு பட்டினம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்ட்டி நடக்கிறது. அங்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதனால் ஜாவித் … Read more

நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து விமர்சனம்: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம்

சென்னை: இந்திய நீதிமன்றங்களின் விடுமுறை தினங்கள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என தொடர் விடுமுறைகள் விடப்படுவது அபத்தமானது என்றும், வழக்குகளின் … Read more

“மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார்” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காந்தி படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் ஒரு பெரிய ஆன்மா, மகாத்மா காந்தி. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் … Read more

டெல்லியில் 126 டிகிரி வெப்பம் பதிவானதாக வெளியான தகவலை வானிலை ஆய்வு மையம் சரிபார்க்க மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ அறிவுறுத்தல்…

டெல்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுபோன்ற அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். It is not official yet. Temperature of 52.3°C in Delhi is very unlikely. Our senior officials in IMD have been asked to verify the news report. The … Read more

அப்படி இல்ல இப்படி.. புஷ்பா 2 ஸ்டெப்பை கற்றுக்கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற கம் கம் கணேஷ் என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு, புஷ்பா 2 படத்தில் ‘சூசெகி’ பாடலின் ஸ்டெப்பை கற்றுக்கொடுக்கும் வீடியோ  இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி

'ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது' – பிரதமர் மோடி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் மதுராபூர் தொகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்துவதற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக கொள்ளையடிக்கிறது. முஸ்லிம்களுக்கு போலியான ஓ.பி.சி. சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த போலி சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் அந்த தீர்ப்பை … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ், பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் தகுதிச்சுற்று முடிந்து தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார்.இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு … Read more

டோங்கா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

நுலுலபா, பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இந்நிலையில், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் … Read more