புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஒப்பீடு: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் ஒரு கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். இன்னும் சில மாடல்கள் இரண்டுக்கும் போட்டியாக இருந்தாலும், இந்த இரண்டு கார்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் அதன் ஈர்ப்பை இழந்து கொண்டிருந்தாலும், ஸ்விஃப்ட் கார்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை.  புதிய … Read more

‛கபி.. கபி’.. மயிலாடுதுறையில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்.. ஏக்கருக்கு ரூ.4,000 மிச்சம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தால் ஏற்பட்ட ஆள்பற்றாக்குறையை சமாளிக்க நெல் நாற்று நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கும் இவர்கள் மாலை வரை பணி செய்வதால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை கூலி மிச்சமாகிறது. இதனால் விவசாய பணிக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்’ அதிகரித்துள்ளது. Source Link

ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு கார் பரிசு.. சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் செய்த தரமான செய்கை!

சென்னை: நகைச்சுவை நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கூல் சுரேஷ்க்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் சேலம் ஆர்ஆர் பிரியாணியின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன். அதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் சிம்புவின் நண்பராக காதல் அழிவதில்லை படத்திலிருந்து பல படங்களில் காமெடி நடிகராக கூல் சுரேஷ் நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து

பிரஜ்வல் ஆபாச வீடியோவை பரப்பிய வழக்குடன் தொடர்புடைய 2 பேர் கைது

பெங்களூரு, கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் ஆவார். ஹாசன் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்திய தேர்தலின்போது ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் ஹாசன் நகர் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு ரேவண்ணா தப்பி சென்று … Read more

டி20 உலகக்கோப்பை: இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு – விராட், ரோகித்தை எச்சரித்த முகமது கைப்

புதுடெல்லி, 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் … Read more

ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை – ஹமாஸ்

காசா முனை, காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் … Read more

பாராளுமன்றத் தேர்தலொன்றை அவசரமாக நடாத்துவதற்கான அவசியமில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்

அரசியலாமைப்பின் ஒழுங்குவிதிகளின் படி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும், அதற்காக இவ்வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அவசியமொன்றில்லை என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்களுடனான சந்திப்பின் போதே செய்தியாளர் ஒருவர் … Read more

விமானத்தில் நிர்வாணமாகத் திரிந்த நபர்; புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்! – என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நகரத்திலிருந்து மெல்போர்னுக்கு நேற்று விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு பயணி நிர்வாணமாக விமானத்துக்குள் வலம் வந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் முகம் சுளிக்க, விமானிகள் பெர்த் விமான நிலையத்துக்குத் தகவலளித்தனர். அதனடிப்படையில், விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் பெர்த் நகரத்துக்குத் திரும்பியது. விமானம் விமானத்திலிருந்த சில பயணிகள் உதவியுடன் அந்த நபர் பிடிக்கப்பட்டு, அவருக்குக் கை விலங்கு போடப்பட்டு, விமானத்தின் இறுதிப் … Read more

சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் தொகுப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர், பயிற்சியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும் என்று அறிவுசார் குறைபாடுள்ளோருக்கான பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அறிவுசார் குறைபாடுள்ளோருக்கான பேரமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 299 சிறப்புப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் சற்றும் பொருத்தப்பாடு இல்லாத ‘தனியார் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டத்தின்’ கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே, சிறப்பு நிறுவனங்களுக்கென்றே பிரத்யோகமான சட்டவிதிகளை உருவாக்க வேண்டும். … Read more

நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு: பிரதமர் மோடி தகவல்

பாலாசோர்(ஒடிசா): ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலாசோரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “பாலாசோர் என்பது ஏவுகணை நகரம். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏவுகணை சக்தி மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாம் நமது பிரமோஸ் ஏவுகணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல், சந்திராயன் நிலவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. … Read more