Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..

Suriya 44 Update : நடிகர் சூர்யாவின் 44வது படத்தை கார்ததிக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?   

அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மோட்டர் சாதனங்களை திருடிய போதை ஆசாமிகள்!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில், போதை ஆசாமிகள் பூட்டை உடைத்து மோட்டர் வாகன சாதனங்களை திருடியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நான்கு பேர் சேர்ந்து அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், Zee5 ஓடிடி பார்க்கலாம்! ரூ.199 போதும்

புதிய திட்டம் ஒன்றை டாடா கொண்டு வந்துள்ளது. அமேசான் பிரைம் லைட்டின் இலவச சந்தாவை டிடிஎச் மற்றும் டாடா ப்ளே பிங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்க டாடா ப்ளே அமேசான் பிரைமுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது தவிர சந்தையில் பல புதிய திட்டங்களையும் டாடா கொண்டு வந்துள்ளது. அவற்றின் விலை மிகவும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாதம் 199 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில், பயனர்கள் டாடா ப்ளே பிரைம் லைட்டின் சந்தாவைப் பெறுவது மட்டுமல்லாமல், 30 க்கும் … Read more

என் மகன் இறந்ததே எனக்கு தெரியல.. இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமா.. சாந்தி வில்லியம்ஸ் வேதனை!

சென்னை: மெட்டி ஒலி சீரியலில் கறார் மாமியாராக நடித்துப் பிரபலமானவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவரது மகன் சந்தோஷ் நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து மனம் உடைந்து பேசிய சாந்தி வில்லியம்ஸ், என் மகன் இறந்தது கூட எனக்கு தெரியாமல், நான் அவனிடம் பேசி விட்டு ஷூட்டிங் போனேன் என்று வேதனையை

3வது முறையாக விமான டிக்கெட் பதிவு செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா…நாடு திரும்புவாரா?

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து

கார்டிப், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டம் கொண்ட டி20 போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் அப்போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டி20 … Read more

ஒரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் 30 ஆயிரம் பேர்: எங்கே தெரியுமா?

பீஜிங், பொதுவாகவே, பெரிய பெரிய நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சீனாவின் ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் பெயர், ‘தி ரிகென்ட் இண்டர் நேஷ்னல் அப்பார்ட்மெண்ட்’ ஆகும். புகழ்பெற்ற சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் வடிவமைப்பாளரான அலிசியா லூ என்பவர் தான் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். இந்த பிரமாண்டமான கட்டிடம் முதலில் சொகுசு ஹோட்டல் கட்டுவதற்காகதான் கட்டப்பட்டது. … Read more

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட  செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் … Read more

பூட்டிய வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; பிளாஸ்டிக் பையில் காத்திருந்த அதிர்ச்சி – போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகான் கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் ஜெய்ராம் (39), திப்யா (29) தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீடு இருந்த பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. முதலில் எலி இறந்திருக்கும் என்று நினைத்த அக்கம் பக்கத்தினர், துர்நாற்றம் அளவுக்கு அதிகமாக வந்தததையடுத்து, அப்பகுதியை சோதனை செய்தனர். அப்போது, ஜெய்ராம், திப்யா தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சந்தேகத்தின் பேரில் வீட்டை திறந்தனர். கொலை பின்னர், அவர்களுக்கு … Read more