Mohan: வெள்ளி விழா நாயகன் மோகன் பங்கேற்ற சூப்பர் சிங்கர் 10 ஷோ.. மீண்டும் கிடாரை கையிலெடுத்த மோகன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது பத்தாவது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்து சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் யுவன் சங்கர் ராஜா ஹிட்ஸ் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்தினர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான

பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது33). இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் களத்தில் உள்ளார். அவரது தொகுதியில் கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடைபெறுதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் வெளியானது. அதில் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு … Read more

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவர் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் நேற்று (30.05.2024) நடைபெற்றது. இதன் போது காணி சுவீகரிப்பு தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து பலதரப்பினரால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. … Read more

செயலி மூலம் கடன் தருவதாக ரூ.40,000 மோசடி; குடும்பத்துடன் தற்கொலை முயற்சி… குழந்தை உயிரிழந்த சோகம்!

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர், 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இவர், சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை இருந்தாள். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரடிவாவி கிராமத்தில் உள்ள நூல் மில்லில் அந்த இளைஞர் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இளைஞர் தனது பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்தியபோது, அதில் வந்த ஆன்லைன் கடன் செயலி லிங்க்கை செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். … Read more

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, தொழிற்சாலையில் பணியில் இருந்த … Read more

குமரியில் பிரதமர் மோடி தியானம் – பின்புலத்தில் 3 முக்கிய காரணங்கள்!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி. இந்தப் பகுதியைத் தியானம் செய்ய தேர்ந்தெடுத்ததற்குத் தனித்த காரணங்கள் இருக்கின்றன. அந்த முக்கியமான மூன்று காரணங்கள் குறித்துப் பார்க்கலாம். உலகத்துக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சும் சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் கன்னியாகுமரியிலிருந்து பார்க்க முடியும். அங்கு கட்டப்பட்டிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வரலாற்றில் தனித்த இடமுண்டு. இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று (மே 30) முதல் தியானம் செய்து வருகிறார். உருவாகிறதா … Read more

தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..

2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த சிறு குறித்து இயக்குனர் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.   

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: ஒன்று திரண்டு வந்து புகார் அளித்த கிராம மக்கள்

தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்… டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!

ICC T20 World Cup Recap: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தருணம் என்றால் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தூக்கியதை சொல்லலாம். அதன்பின், 2011ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வையும் குறிப்பிடலாம். ஆனால், அதற்கு முன் தோனியின் தலைமைக்கு விதிட்ட ஒரு நிகழ்வு என்றால் 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை சொல்லலாம்.  2007ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் … Read more