சேலம்: சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்று விட்டு நாடகமாடிய மகன் – போலீஸில் சிக்கியது எப்படி?!

சேலம், கருப்பூர் அருகில் உள்ள கோட்ட கவுண்டம்பட்டி ஈச்சம் காட்டூரை சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவருக்கு அலமேலு என்ற மனைவியும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட காளியப்பன் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கோயில் திருவிழாவிற்காக மனைவி அலமேலு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது காதில் ரத்தம் வந்த நிலையில் தலையில் காயத்துடன் கணவர் காளியப்பன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து … Read more

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள்: வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவு தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும் விதம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக … Read more

“அமித் ஷா அரசியல் சாணக்கியர்” – உ.பி. முன்னாள் அமைச்சர் புகழாரம்

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான நரட் ராய், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் வாராணசியில் சந்தித்துப் பேசி உள்ளார். பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நரட் ராய், அமித் ஷாவுடன் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் உள்ளார். இதுகுறித்து நரட் ராய் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இந்தியாவின் பெருமையை … Read more

“1999-ல் இந்தியா உடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது” – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: கடந்த 1999-ல் இந்திய தேசத்துடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பிஎம்எல் (நவாஸ்) கட்சியின் பொது கவுன்சிலில் அவர் இதனை தெரிவித்தார். “கடந்த 1998-ம் ஆண்டில் அணு ஆயுத சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டது. அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு வந்து ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆனால், அதனை பாகிஸ்தான் மீறி இருந்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அணு ஆயுத சோதனையை நிறுத்த சொல்லி … Read more

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

Mamitha Baiju Second Tamil Movie : சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற பிரேமலு திரைப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.   

கார்கில் போருக்கு காரணம் நாங்கள்தான்.. உண்மையை ஒப்புக்கொண்ட பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். கார்கில் போருக்கு பாகிஸ்தானின் இந்த மீறல் நடவடிக்கை காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை என மொத்தம் 85 நாட்கள் கார்கில் போர் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் Source Link

அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பயன்பாடு.. ’கோட்’ படப்பிடிப்புக்கு ஆப்பு அடித்த புதுச்சேரி கலெக்டர்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்து படப்பிடிப்பு நடத்திய நிலையில் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறுகின்றனர். தளபதி விஜய்யின் 68 வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. ஹாலிவுட்

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் அவற்றின் தற்போதைய மட்டங்களில்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 மே 27ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் … Read more

Doctor Vikatan: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா நாவல் பழமும், நாவல் பழக் கொட்டைகளும்?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் நல்லது என்பது உண்மையா? எத்தனை பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்? நாவல் பழக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் பொதுவாக நீரிழிவு நோயாளிகளை எல்லாப் பழங்களையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். அவர்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிற பழங்களில் முக்கியமான ஒன்று நாவல்பழம், நாவல் பழம் கிடைக்கும் சீசனில், ஒரு நாளைக்கு 3 … Read more

“முழு நலமுடன் வருவேன்” – வைகோ வெளியிட்ட வீடியோ பதிவு @ மருத்துவமனை

சென்னை: தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சென்னை – அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 25-ம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் … Read more