ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. ஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த … Read more

போதை கலாச்சாரத்தில் இளைஞர்கள் பாழாக பாஜக காரணம் : செல்வப்பெருந்தகை

சென்னை போதை கலாச்சாரத்தில் இளைஞர்கள் பாழாக பாஜக தான் காரணம் எனக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்/ இன்றுசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ”ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, … Read more

அந்த விஜய் பட இயக்குநர் என்றால் அஜித் கதைக்கூட கேட்காமல் நடிப்பாராம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று

விருதுநகர் குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முத்தரசன் கோரிக்கை

சென்னை: “விருதுநகர் குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர் முற்றிலும் குணமடைந்து பணிக்கு திரும்பி மறுவாழ்வு பெறும் வரையிலான காலத்துக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகில் உள்ள கீழ உப்பிலிகுண்டு பகுதியில் கல் குவாரி … Read more

இந்திரா காந்திக்கு ‘கை’ கொடுத்த மேதக்!

இந்திரா காந்தி உட்பட காங்கிரஸார் படுதோல்வி அடைந்தனர். ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. மொராஜி தேசாய் பிரதமரானார். ஆனால், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் தங்களின் தலைவர் இந்திரா காந்தியை எப்படியாவது வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டனர். இதனால் 1978-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் காங்கிரஸ் எம்பி வீரேந்திர பாட்டீல் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. மக்கள் பகல் நேரத்தில் மக்கள் வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ஆயினும்,ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை … Read more

அம்மா கதாபாத்திரத்துக்கு கூட அட்ஜெஸ்ட் பண்ண சொல்றாங்க.. புலம்பும் சீனியர் நடிகை.. எல்லாமே தப்பு!

சென்னை: ஒரு காலத்தில் சினிமா நடிகையாக பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை தற்போது மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகளே இல்லாத நிலையில், அம்மா நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் பக்கத்து ஸ்டேட் படத்தில் நடிக்க முயற்சித்து இருக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே ஹேப்பி

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: ஏப்.19 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு, சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்.19 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், ராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர் மற்றும் … Read more

“ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது” – பிரதமர் மோடி விமர்சனம்

ஆனந்த் (குஜராத்): “பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ஹூசைன், ராகுல் காந்தியை பாராட்டி பேசிய சில நாட்களுக்கு பின்னர் பிரதமர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில் இன்று (மே 2) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “காங்கிரஸ் கட்சி இங்கே வீழ்ச்சி … Read more

மக்களை வெயிலை விட  மோடியின் கொள்கை சுட்டெரிக்கிறது : கார்கே

டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடியின் கொள்கை வெயிலை விட அதிகமாக மக்கலை சுட்டெரிப்பதாக கூறி உள்ளார் பிர்தமர் மோடிக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கார்கே, ” காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் … Read more