ஒரு வழியா பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த ஜாக்பாட்.. அந்த 100 கோடி ஹீரோவுடன் நடிக்கப் போறாரா?

ஹைதராபாத்: இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படங்களில் இதுவரை 2 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் மற்றும் சித்து நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர். ஹனுமான் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெற்று 300 கோடி வசூல் ஈட்டியது. டில்லு ஸ்கொயர் தெலுங்கில் சிறப்பாக ஓடி 100 கோடி வசூல் செய்தது.

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி: நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சிறுமி படுகொலை வழக்கில் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர். … Read more

‘ஏழைகளை வெயிலை விட அதிகம் சுட்டெரிப்பது பாஜக கொள்கைகளே!’ – மோடிக்கு கடிதத்தில் கார்கே பதிலடி

புதுடெல்லி: “வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றி பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை” என விமர்சித்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை மோடி கூறியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் … Read more

வருமான வரி தாக்கலை அதிகரிக்க பாகிஸ்தானில் 5 லட்சம் பயனர்களின் சிம் கார்டுகளை முடக்க திட்டம்

இஸ்லாமாபாத்: சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களின் சிம் கார்டுகளை முடக்க திட்டமிட்டுள்ளது அந்த நாட்டின் மத்திய வருவாய் வாரியம். நாட்டு மக்களிடையே வருமான வரி தாக்கலை அதிகரிக்க செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி சுமார் 5,06,671 பயனர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரத்தை வருமான வரி பொது உத்தரவு மூலம் மத்திய வருவாய் வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் … Read more

ஆம் ஆத்மி எம் பியால் பணி அமர்த்தப்பட்ட டெல்லி மகளிர் ஆணைய  ஊழியர்கள் 223 பேர் பணி நீக்கம்

டெல்லி டெல்லியில் அமைந்துள்ள மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். விதிகளை மீறி டெல்லி மகளிர் ஆணையத்தில் ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எமவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்தது தெரிய வந்தது. எனவே மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 233 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு, டெல்லி ஆளுநர் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி … Read more

பாலியல் புகார்.. “என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற முயற்சித்தால்..” மேற்கு வங்க ஆளுநர் பரபர!

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது, ராஜ் பவன் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக தகவல் வெளியான நிலையில், தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார் ஆளுநர் ஆனந்த போஸ் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், தற்போது மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். ஆனந்த Source Link

Director Sundar C: சுந்தர் சியுடன் திருமணத்திற்கு நோ சொன்ன குஷ்பூ.. ஏன் தெரியுமா?

சென்னை: நடிகர் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அரண்மனை 4 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசையொட்டி கடந்த சில தினங்களாகவே சுந்தர் சி உள்ளிட்ட பட குழுவினர் அடுத்தடுத்து மிகச் சிறப்பான ப்ரொமோஷன்களை கொடுத்து வருகின்றனர். தன்னுடைய சொந்த வாழ்க்கை,

மழை வேண்டி முஸ்லிம் மக்கள் சட்டையை திருப்பி அணிந்து சிறப்புத் தொழுகை @ சேலம்

சேலம்: சேலத்தில் மழை வேண்டி முஸ்லிம் மக்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக … Read more

சர்ச்சைக்குரிய எம்.பி பிரிஜ் பூஷணுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கியது பாஜக

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பிரிஜ் பூஷணுக்கு பதிலாக, இந்த முறை அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷண் உள்ளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கைசர்கஞ்ச் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள பிரிஜ் பூஷணின் இளைய மகன்தான் கரண் பூஷண் சிங். இவர் தற்போது உத்தரப் பிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதேபோல், … Read more

கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்… 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!

SRH vs RR Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடரின் 17வது சீசனின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்று இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  இருப்பினும் இந்த முறை சன்ரைசர்ஸ் அணி மெதுவாகவே தொடங்கியது. பவர்பிளே … Read more