கயத்தாறு அருகே சூறைக்காற்றில் 1,000+ பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதம்

கோவில்பட்டி: கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் சுமார் ஆயிரம் பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்தன. கயத்தாறு அருகே காப்புலிங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம்(53). இவருக்கு சொந்தமான தோட்டம் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் செல்வம், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி விதைகளை நடவு செய்திருந்தார். இந்த விதைகளில் பப்பாளி மரங்கள் வளர்ந்து, பூ பூத்து, காய் காய்த்து பருவம் அடைந்த நிலையில் உள்ளன. இந்நிலையில் … Read more

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு அரசு பணி கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: காஷ்மீர் மக்களில் எவரேனும் தீவிரவாத அமைப்புகளில் இணைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படமாட்டாது என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். ஒருவேளை தங்களது உறவினர் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குடும்பத்தினர் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டு துப்பு கொடுத்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால் இந்த முடிவு … Read more

எதே ராயன், கல்கி பட ரிலீஸ் தள்ளிப் போகுதா?.. அப்போ இந்தியன் 2வுக்கு மறுபடியும் ஆப்பு கன்ஃபார்மா?

சென்னை: இந்த ஆண்டு இதுவரை ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் பெரிய படங்கள் என்று பார்த்தால் அரண்மனை4 படம் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, அசோக் செல்வன், கவின், மணிகண்டன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்: 2.65 லட்சம் பேரில் 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்

சென்னை: ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2.65 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில் 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 1.50 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக, ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்’ கடந்த மாதம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. … Read more

“பிரதமர் மோடிக்கு ராகுல் ஒருபோதும் ஈடாக முடியாது” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்’ ஆங்கில வார இதழின் முன்னாள் ஆசிரியரான இவர், புனே பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராகவும் உள்ளார். மும்பை பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாகவும் உள்ள இவர் மக்களவைத் தேர்தலில் பாஜக மீதான புகார்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு: நானூறுக்கும் அதிகமான தொகுதிகளை பெறுவோம் என நம்பிக்கை வைத்த … Read more

‛‛All Eyes On RAFAH’’ ஒரே போஸ்ட்டில் கவனம் பெற்ற திரிஷா – சமந்தா! பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடிகைகள்

காசா: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 9வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் All Eyes On RAFAH என்பது டிரெண்டாகி வரும் நிலையில் நடிகை திரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்களின் இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அண்டை நாடுகளான இஸ்ரேல் Source Link

நீலோற்பம் நீரில் இல்லை.. இந்தியன் 2 புரமோவே நல்லா இல்லை.. மீண்டும் கம்பேர் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்மா, எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2,000 இளைஞர்கள் @ மதுரை

மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் அதிமுகவில் இன்று (மே 28) இணைந்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று, ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியிலுள்ள டி. குன்னத்தூர் அம்மா கோயிலில் இன்று நடந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் … Read more

மீண்டும் ஊழல் செய்யவே இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது: மோடி குற்றச்சாட்டு

தும்கா(ஜார்க்கண்ட்): மீண்டும் ஊழல் செய்யவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் தும்கா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நீங்கள் என்னை ஆசீர்வதித்தீர்கள். நான் பிரதமரானேன். அப்போது காங்கிரஸின் தவறான ஆட்சியால் நாடு சோர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஊழல்கள் நடந்தன. ஏழைகளின் பெயரில் பணத்தைக் கொள்ளையடிப்பதில் காங்கிரஸ் கட்சி இடைவிடாது ஈடுபட்டது. அவற்றையெல்லாம் நான் … Read more

கேரளா உணவகத்தில் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியது… சிகிச்சையில் இருந்த பெண் மரணம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உட்கொண்டதால் உணவு விஷமாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார். மூனுபீடிகைக்கு அருகிலுள்ள பெரிஞானத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சனிக்கிழமையன்று உணவை உட்கொண்ட சுமார் 70 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் பெரிஞானம் பகுதியைச் சேர்ந்த உசைபா (50) செவ்வாய்கிழமை அதிகாலை இறந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். யேமன் நாட்டு … Read more