புதுச்சேரி: 500 பக்கங்கள்… 80 சாட்சிகள்… ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்!
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, பிப்ரவரி 2-ம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி வீட்டிற்கு அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் விவேகானந்தன் என்ற முதியவரையும், கருணாஸ் என்ற இளைஞரையும் கைதுசெய்தனர், முத்தியால்பேட்டை போலீஸார். அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில், எஸ்.பி … Read more