“சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது” – ஜோ பைடன் கருத்து

நியூயார்க்: “சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதனால்தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன். இதற்காக தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பைடன், “சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள். … Read more

பவன் கல்யாணின் 'ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஹரி ஹரா வீர மல்லு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.   

நம்ம யாத்ரி… கமிஷன் இல்லாமல் கோடி வருவாய் – சென்னையில் கலக்கும் ஆட்டோ செயலி

Namma Yatri App: டாக்சி ஓட்டுனருக்கு கமிஷன் இல்லா ‘நம்ம யாத்ரி’ செயலி.., ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அச்செயலி தெரிவித்துள்ளது. 

"உமா ரமணனைக் கௌரவிக்கிற விதமா இதை முன்னாடியே பண்ணிருக்கலாம்!" – கங்கை அமரன் ஆதங்கம்

`ஆனந்தராகம்’ பாடிய தேன் குரல் தற்போது நிசப்தமாய் அடங்கிப்போயிருக்கிறது. ஆம்… `ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ கேட்க கேட்க எந்தக் காலத்திலும் திகட்டாத பாடலைப் பாடிய பாடகி உமா ரமணன் மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பூபாளம் இசைக்கும்’, ‘கண்மணி நீ வரக் காத்திருந்தேன்’, ‘நீ பாதி நான் பாதி கண்ணே’, ‘ஒன்ன பார்த்த நேரத்துல’ என எண்ணற்ற பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் இதயங்களை இனிக்கவைத்தவர். குறிப்பாக, சினிமாவில் பாடகியாக அறிமுகமான புதிதில், இசையமைப்பாளர் … Read more

கக்கன் படப்புகழ் இளம் இசையமைப்பாளர் மரணம்

சென்னை கக்கன் படப்புகழ் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் அடைந்துள்ளார். இளம் இசையமைப்பாலர் பிரவீன் குமார் இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. அவருக்கு வயது 28. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில்  அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் இன்று அதிகாலை சிகிச்சை … Read more

கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை! உடனே காப்பாற்ற உதவுங்கள்!

சென்னை: பிறந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன பச்சிளம் குழந்தை சாத்விக், பிறவி இதய குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சென்னை அடுத்துள்ள பொன்னேரியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் எண்ணூரில் உள்ள அசோக் லேலாண்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தினேஷா எனும் இளம் Source Link

ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித்தின் பிறந்தநாளான நேற்று அவரது படங்கள் குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டாவது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்திற்காவது ஒரு போஸ்டராவது வரும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாந்து போனார்கள். இது குறித்து விசாரித்தபோது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஜுன் மாதம்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. இப்போதே ஒரு போஸ்டரை விட்டால் … Read more

Shaitaan movie: நாளை ஓடிடியில் வெளியாகும் ஜோதிகாவின் ஷைத்தான் படம்.. மிரளத் தயாரா மக்களே!

சென்னை: நடிகர் மாதவன், அஜய் தேவகன், ஜோதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் ஷைத்தான். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ஜோதிகா ஹிந்தியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு இந்த ரீ-என்ட்ரி படம் மிகச்சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் சூனியம் செய்யும் மந்திரவாதி கேரக்டரில்

ரூ.2,000 கோடி: கொச்சி டு ஹைதராபாத்… கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய பெரும் தொகை! – நடந்தது என்ன?

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 26-ம் தேதி கேரளா உள்ளிட்ட 88 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 94 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. 2024 Election – நாடாளுமன்றத் தேர்தல் இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு, நான்கு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கின்றன. இதில், … Read more

இணையவழி சூதாட்ட விளம்பரங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது. தடை செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more