கோயில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தன்னார்வலர்களின் விண்ணப்பம் 7 நாளில் பரிசீலனை
சென்னை: தமிழகத்தில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்களின் தூய்மைப்பணிகளில் பக்தர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் உழவார பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் … Read more