கிருஷ்ணகிரியில் வறட்சியில் வாடும் மா மரங்களுக்கு லாரிகளில் நீர் வசதி: தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
சென்னை: கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காக்க,லாரிகள் மூலம் தண்ணீர் வசதிஏற்படுத்திக் கொடுத்து, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாம்பழத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்வது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தான். 62 வெளி நாடுகளுக்கு மா கூழ் ஏற்றுமதியாகிறது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. … Read more