‘கூலி’க்கு அனுமதி பெறாமல் தனது இசையை பயன்படுத்திய சன் பிக்சர்சுக்கு இளையராஜா நோட்டீஸ்

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு அனுமதியில்லாமல் தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற ‘வா.. வா… பக்கம் வா…’ பாடலுக்கான இசையை கூலி படத்தின் டீசரில் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது, டீசரில் இருந்து அந்த … Read more

ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அனிருத் இசையமைக்கிறார். இந்த டீசரில் எம்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‛நினைத்தாலே இனிக்கும்' பட பாடல் வரிகள் ரஜினி பேசும் வசனங்களாக இடம் பெற்று இருந்தது. அதோடு அந்த டீசரில் ரஜினியின் ‛தங்க மகன்' படத்தில் இடம் பெறும் ‛வா வா பக்கம் வா…' பாடலின் … Read more

மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி அவ்வளவு அழகுனு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: சமையல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது வித்தியாசமான தனித்துவமான சமையல் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக  களமிறங்க உள்ள  மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் மாதம்பட்டி பாகசாலா என்ற பெயரில்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்கப்படும்   மனுஷ நாணயக்கார

தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (01) கொட்டக்கலையில் நடைபெற்ற   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  மே தின கூட்டத்தில் தெரிவித்தார் பெருந்தோட்டத் தொழிலாளர்களை கவனத்தில் கொண்ட தரப்பினர் உரிய முறையில் செயற்படாவிட்டால் அதற்கான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். “என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இலங்கை தொழிலாளர் … Read more

சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்

China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

`திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜக-வுக்கு வாக்களிப்பதே மேல்' – ஆதிர் ரஞ்சன் சௌத்ரி!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெற்றி பெறுவது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிடும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பது, எனவே நேரடியாக பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதே நல்லது. எனவே, பா.ஜ.க-வுக்கும் வாக்களிக்காதீர்கள், திரிணாமுல் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். காங்கிரஸுக்கே வாக்கு செலுத்துங்கள்” எனப் பேசியதாக ஒரு வீடியோ வைரலானது. காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் … Read more

சட்டங்களை திருத்தி தொழிலாளர்கள் போராடும் உரிமையை பாஜக பறித்துவிட்டது: சிபிஎம்

புதுச்சேரி: மத்திய பாஜக அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி, அதனை 4 சட்டங்களாக சுருக்கி போராடக்கூடிய உரிமையை பறித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி அஜீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மே தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை … Read more

“70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்” – பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: “நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை பெரிய ஆயுதமாக மாற்றி … Read more

வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்… ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!

GST Revenue Collection: 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. 

நடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டீசர் வெளியானது

பகலறியான் திரைப்படத்தின் டீசர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டார். படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.