“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?” – அமித் ஷா

ஜாஜ்பூர்(ஒடிசா): ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார், ஒடிசாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, … Read more

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட நர்ஸிங் மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு… மூடப்பட்ட சமையல் கூடம் – முழு விவரம்!

TN Latest News Updates: சேலத்தில் செவிலியர் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் இதன் அப்டேட்டையும் இதில் காணலாம். 

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்… அதிகபட்சமாக சென்னையில் 106°F வெப்பம் பதிவானது…

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fக்கு அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக சென்னையில் 106°F வெப்பம் பதிவானது. மே இரண்டாம் வாரம் கத்திரி வெயில் ஆரம்பித்த நிலையில் பல இடங்களில் வெயில் அதிகரித்தது. கடந்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை அடுத்து தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமான மழையும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு … Read more

Kalki: தமிழ்நாட்டில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்.. விலை மட்டும் இத்தனை கோடியா?

சென்னை:  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி இன்னும் 30 நாட்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் தோல்வி

சிங்கப்பூர், மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார். … Read more

கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் – 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் … Read more

கஸ்டமைஸ்டு கான்டினென்டினல் ஜிடி 650 மாடலை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

இங்கிலாந்தில் நடைபெறுகின்ற 2024 Savile Row Concours அரங்கில் ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டினல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் இங்கிலாந்தின் டாப்கியர் இதழ் , ராயல் என்ஃபீல்டு மற்றும் இங்கிலாந்தில் உள்ள திறமையான கைவினை கலைஞர்கள் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஜிடி 650 பைக்கில் உள்ள பிரத்தியேக பாடி கிராபிக்ஸ் அலெக்சாண்டர் கால்டரின் BMW 3.0 CSL Le Mans காரின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் ஆனது Baak நிறுவனத்தின் … Read more

அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு

அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இது தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமித்தல் அரச சேவையில் பல்வேறு ஊழியர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அந்தந்த தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் … Read more

`ஒடிசாவில் தமிழர் முதல்வராவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்!' – அமித் ஷா ஆவேசம்

நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் சில முக்கியமான மசோதாக்களில், பிஜு ஜனதா தளத்தின் ஆதரவைப் பெற்ற மத்திய பா.ஜ.க, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதே கட்சியைக் கடுமையாக எதிர்த்துவருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த முயற்சியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை விடவும் அவரின் வலதுகரமாகக் கருதப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் … Read more

கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யானை வழித்தட வரைவு: இந்து முன்னணி வலியுறுத்தல்

கோவை: ‘யானை வழித்தடங்கள் என்ற பெயரில் கோயில்களை குறிவைக்கும் போக்கை கைவிட வேண்டும்.எனவே கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் யானை வழித்தட வரைவை ஏற்படுத்த வேண்டும்’, என்று கோவையில் நடந்த இந்து முன்னணி செயற்குழுக் கூட்டத்தில், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் பேசினார். இந்து முன்னணி இயக்கத்தின் கோவை மாநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், காட்டூரில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (மே 28) நடந்தது. இக்கூட்டத்துக்கு இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை … Read more