கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்த முன்னாள் மாணவர்!

மதுரை என்றாலே நன்றி மறவா மக்கள் பாசக்காரங்க என்பதற்கு உதாரணமாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆசிரியர்களை வீட்டிற்கே அழைத்து வந்து விருந்து கொடுத்துள்ளார்.  

இங்கிலாந்து முதல் இந்தியா வரை! டி20 உலக கோப்பை அணியின் முழு விவரம்!

ஐசிசி டி20 உலககோப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக் கோப்பையின் 9வது பதிப்பு, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதற்கான தங்களது அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகிறது. ஏப்ரல் 29 அன்று நியூசிலாந்து தங்கள் அணியை முதலில் அறிவித்தது.  அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் 15 … Read more

கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு…

கிழக்கு ஆசியாவி்ன் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான்மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி வெயில் பதிவானது. பங்களாதேஷில் 109 டிகிரியும், லாவோஸ் வியட்நாம் மற்றும் நேபாளில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது. சீனாவில் 107 டிகிரியும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் 98 டிகிரிக்கு சற்று கூடுதலாகவும் வெப்பம் பதிவானது. கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கடந்த வாரம் … Read more

ஆபரேஷன் அக்னி.. கொடைக்கானலில் ஸ்டாலின் போடும் பிளான்.. 5 முக்கிய திட்டம்.. பதறி நிற்கும் தலைகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறாராம். தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து Source Link

தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001ம் ஆண்டில் வெளிவந்த முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியான அந்தப் படம் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் நடித்து ரீ-ரிலீஸ் ஆன 'கில்லி' படம் பத்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்திற்கான தியேட்டர் கொண்டாட்டங்கள் பலவும் வீடியோக்களாக வெளிவந்தன. அவற்றை மிஞ்சும் விதத்தில் இன்று சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. … Read more

கில்லி பேனர் கிழிப்பு.. அஜித் ரசிகர்கள் அட்டகாசம்.. தியேட்டருக்குள் சரவெடி.. எங்க போய் முடியுமோ?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கில்லி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ஓடிவந்த நிலையில், தற்போது தீனா ரீ ரிலீஸை முன்னிட்டு தியேட்டருக்கு வந்த அஜித் ரசிகர்கள் கில்லி பேனரை கிழிக்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. மேலும், ரீ ரிலீஸ்

புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முன்பதிவு துவங்கியது

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட புதிய 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 11,000 வசூலிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி டீலர்கள் மற்றும் ஆன்லைன் வழியாக இந்த முன்பதிவானது நடைபெற்று வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் கிடைத்த வருகின்ற ஸ்விஃப்ட் மிகச் சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் … Read more

மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் உதிரம், வியர்வை மற்றும் உயிர்த் தியாகங்கள் மீதான பயணத்தின் வரலாற்றுப் பதிவாக 138வது உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இம்முறை அதனை எமது தொழிற் சூழல்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் முக்கியமானதொரு தருணத்திலேயே கொண்டாடுகிறோம். எனினும் எத்தகைய உடன்படிக்கைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. உழைக்கும் மக்களுடனான உரையாடல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தொழிற்சூழலை முடிவு செய்கிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட … Read more

கோவை: சுவர்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக கலர்ஃபுல் ஓவியங்கள் – அவை சொல்லும் மெசேஜ் என்ன?

சுவர்களில், குடியிருப்புப் பகுதிகளில் அப்பகுதி மக்களின் வாழ்வியலை, அவர்களது பண்பாட்டை, கலாசாரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் ஓவியங்கள் வரைவது சமீபகாலமாகவே டிரெண்ட் ஆகிவருகிறது. அவ்வாறு, சமீபத்தில் கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்காவிற்கு எதிரில், வரையப்பட்ட ஓவியங்கள் அப்பகுதி மக்களிடைய மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது. இது குறித்து அந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களில் ஒருவரான கௌசலை அழைத்துப் பேசினோம். அப்போது பேசியவர், “நாங்க கற்பகம் காலேஜ்ல ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டெக்னாலஜி படிக்குற ஸ்டூடண்ட்ஸ். நாங்க … Read more

வறட்சி பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் … Read more