குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்

நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.

சிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்… பஞ்சாப் அணியில் இன்று ரீ-என்ட்ரி?

CSK vs PBKS Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் 17வது சீசன் (IPL 2024) தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 9, 10 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற 10 அணிகளும் இன்னும் முட்டி மோதி வருகின்றன. மும்பை, பெங்களூரு அணிகள் முறையே கடைசி 9, 10ஆவது இடத்தில் இருந்தாலுமே சற்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.  அதேபோலவே, 8வது … Read more

பிரேசிலில் 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

பிரேசிலியா பிரேசில் நாட்டில் 4 மாதங்களில் 40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் … Read more

ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு தான் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன் அதன் பயனாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. … Read more

\"எழுத்து வைரமுத்து.. இசை இளையராஜா.. குரல் ஜேசுதாஸ்\".. இது வேறமாறி அட்டாக்கா இருக்கே பாஸ்!

சென்னை: ஒரு பாடல் என்பது இசை மற்றும் மொழி கலந்த கலவைதான் என தொடர்ந்து வைரமுத்து வலியுறுத்தி வருகிறார். இசை மட்டுமே பெரியது என நினைப்பது மிகப்பெரிய தவறு என்பது இளையராஜாவுக்கு உணர்த்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார் வைரமுத்து. கல்வியா? செல்வமா? வீரமா? என சரஸ்வதி சபதமே நடப்பது போல வைரமுத்து மற்றும் இளையராஜா

பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் ேவட்பாளரின் வேட்புமனு, குறைபாடுகள் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன. அதனால், அத்தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கன்டி பாம், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இரு நிகழ்வுகளும் காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரபை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அல்காரஸ் ரஷியாவின் … Read more

கம்போடியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி – வெடிபொருட்களை தவறாக கையாண்டதாக தகவல்

பினோம் பென், கம்போடியாவின் கமோங் சிபியூ மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். ராணுவ தளத்தில் உள்ள 4 கட்டிடங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் உடல்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வெடிபொருட்களை தவறாக … Read more

`5 ஆண்டுகள்… 5 பிரதமர்கள்' – `இந்தியா' கூட்டணியின் பிளான் என மோடி உள்ளிட்ட பாஜக-வினர் சாடுவது ஏன்?

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள்” என்று விமர்சித்தார். மோடி மேலும், “எதிர்க்கட்சிகளால் மூன்று இலக்கத்தைக்கூட எட்ட முடியாது. அவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால், ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்று கனவு காண்பவர்களை … Read more

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும்

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மே 3-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more