செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில் வங்கி அசல் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரி செந்தில் … Read more

ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியதால் மஜதவில் இருந்து நீக்கம்: தேவகவுடா பேரன் பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பினார்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு தப்பிய அவர் உடனடியாக நாடு திரும்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் (33). கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யான அவர், தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் மீண்டும் … Read more

ஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!

England’s World Cup Squad: 2022ம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்திய அணியையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், ஜோஸ் பட்லரின் தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது.  வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆல்-ரவுண்டர் டாம் ஹார்ட்லி போன்ற வீரர்கள் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். … Read more

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம்

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் *திருவிழா* தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம். *தல சிறப்பு* இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி “லட்சுமி கோபாலர்’ என்று அழைக்கப்படுகிறார். *பொது தகவல்* பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை “அருள்தரும் ஆஞ்சநேயர்’ என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி மட்டும் இருக்கிறது. இத்தல … Read more

மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம்

உறியடி, உறியடி 2 படங்கள் மூலம் பிரபலமானார் நடிகரும், இயக்குனருமான விஜயகுமார். கடைசியாக பைட் கிளப் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் 'எலக்சன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி இப்படம் தயாராகி … Read more

”புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்”.. செல்வராகவன் ட்வீட்.. குவியும் கோவிஷீல்டு கமெண்ட்ஸ்!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென ஏதாவது ஒரு தத்துவ ட்வீட் போடுவார். அதன் பின்னர் பல நாட்கள் ஆள் காணாமல் போய் விடுவார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் பெரும்

ஆந்திராவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: பா.ஜனதா கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில சட்டசபை தேர்லுக்காக பா.ஜனதா கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளும், 17 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜனதா கட்சிக்கு 6 … Read more