நீதிமன்றம் பிரிஜ்வலை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.மஜத சார்பில்  பிரஜ்வல் ரேவண்ணா, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார் . ஏப்ரல் 26 ஆம் தேதி அவரது தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹாசனில் பிரஜ்வல் … Read more

பேங்கில் ஊழியர்களே இல்லை.. புகார் அளித்த கஸ்டமருக்கே ஷாக் கொடுத்த எஸ்பிஐ வங்கி.. என்னன்னு பாருங்க

ஜெய்பூர்: ஸ்டேட் வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றபோது அங்கு ஊழியர்களே இல்லை என்றும் இது குறித்து கேட்டதற்கு ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு சாப்பிட சென்றிருப்பதாக கூறினார்கள் என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்பிஐ கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்.பி.ஐ. நாடு Source Link

Actor Ajith: அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடல்.. 250க்கும் மேற்பட்ட டான்சர்ஸ் ஆட போறாங்களாம்!

ஐதராபாத்: நடிகர் அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பு ஜூன் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதால் மே மாதத்திலேயே குட் பேட்

காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப அமைப்பானது கேமராவுடன் கூடிய கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த கேமரா, 15 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளை படம்பிடிக்கக்கூடிய அதிக செயல்திறன் கொண்டது. இது 350 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட புலிகள் காப்பக பகுதியை … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணிகளை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் பெங்களூருவிலும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் … Read more

இந்தியாவின் முதல் நிஃப்டி EV & New Age Automotive indexயை துவங்கிய தேசிய பங்குச் சந்தை

பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மாருதி என சுமார் 34 பங்குகளை உள்ளடக்கிய மின்சார வாகனம் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்கான Nifty EV & New Age Automotive index என்ற பெயரில் தனி குறீயிடு தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) நிறுவனம் துவங்கியுள்ளது. நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி போன்ற இன்டெக்ஸ் போல ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிஃப்டி ஆட்டோ உள்ள நிலையில் பிரத்தியேகமாக மின்சார வாகனங்கள் மற்றும் … Read more

ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் த்ரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி

? த்ரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா த்ரிபோஷ நிறுவனம் அவதானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் த்ரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார். இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்தத் த்ரிபோஷவை நிபந்தனையுடன் உற்பத்தி … Read more

Bank Account Rent: வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து மோசடி; சீனர் உட்பட 5 பேர் கைது! – பின்னணி என்ன?

வங்கி கணக்குகள் வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் மூலம் முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் நடப்பதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை வளையத்தில் பீகாரின் நவாடாவைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி என்பவர் சிக்கினார். டெலிகிராம் பக்கத்தில் ஒரு கணக்கைத் தொடங்கி, அதில் `வங்கிக் கணக்குகள் வாடகைக்கு வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார். டெலிகிராம் இதில் பல்வேறு நபர்கள் வங்கிக் கணக்கை வாடகைக்கு தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதில், வர்த்தகம், சம்பளக் கணக்காக இருந்தால் 20,000 ரூபாயும், சேமிப்புக் … Read more

வாக்கு எண்ணிக்கை நடைமுறை: தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அவசர கடிதம்

சென்னை: தபால் வாக்கு, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் அவ்வப்போது … Read more

சவாலாக வெயில், மழை – 57 தொகுதிகளில் சனிக்கிழமை இறுதிகட்ட வாக்குப்பதிவு 

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை ) நடைபெறுகிறது. பிஹார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும். கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையில் 6 … Read more