Motivation Story: உறவா, பணமா… எது முக்கியம்? – ஒரு வாழ்க்கைப் பாடம்!

`இளமை என்பது ஒரு பெரும் பிழை; நடுத்தர வயது என்பது ஒரு போராட்டம்; முதுமை என்பது ஒரு துயரம்.’ – பெஞ்சமின் டிஸ்ரேலி (முன்னாள் பிரதமர், யுனைட்டெட் கிங்டம்). `எதுக்கெல்லாம் கணக்கு பார்க்குறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?’ இப்படி யாரோ ஒருவர், யாரிடமோ சொல்வதை நாம் கேட்டிருப்போம். இன்றைய கார்ப்பரேட் காலத்தில் காசில்லாமல் ஒன்றும் நடக்காது, நிஜம்தான். நம் பாக்கெட்டில் மீந்திருக்கும் கடைசிக்காசு வரை உருவியெடுக்க பல திசைகளிலிருந்து நீளும் கைகள் அநேகம், உண்மைதான். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, … Read more

இரவுகளில் இன்ஸ்டா சூட்டிங் ஸ்பாட்டாக மாறும் மதுரை நத்தம் பறக்கும் பாலம்: மக்கள் வேதனை

மதுரை: ரூ.612 கோடி செலவில் கட்டப்பட்ட மதுரை நத்தம் பறக்கும் பால சாலை நாள்தோறும் இன்ஸ்டா அலப்பறைகளின் ‘ஸ்பாட்டாக’ மாறிவருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பாலத்தைப் பயன்படுத்த பொதுமக்கள் அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபோதையில் கையில் மதுபாட்டில்களுடன் இளைஞர் கும்பல் ஒன்று நத்தம் பறக்கும் பால சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி நின்றபடி அலப்பறை செய்வது போல போனில் இன்ஸ்டா சூட்டிங் பதிவு செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பறக்கும் பால … Read more

டெல்லி – வாராணசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து வாராணசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து அதில் இருந்த பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேறினர். விமானத்தில் சோதனை மேற்கொள்ள ஏதுவாக தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமானம் காலை 5.35 மணிக்கு புறப்பட இருந்தது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அவசரகால கதவு வழியாக பயணிகள் வெளியேறும் வீடியோ சமூக … Read more

“இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” – காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்

நியூயார்க்: ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த … Read more

விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்!

தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் படி, தமிழகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  

ராஜஸ்தானில் மனைவிக்காக கள்ள காதலி கொலை… ஏன் ? காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்…

காதலி வேண்டுமா அல்லது நான் வேண்டுமா என்று மனைவி நிபந்தனை விதித்ததை அடுத்து காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் ஃபலாசியா காவல் நிலையப் பகுதியில் உள்ள காட்டில் கடந்த மாதம் ஒரு பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரித்து வந்த காவல்துறையினர் 39 நாட்களுக்குப் பிறகு இதில் தொடர்புடைய தேவிலால் என்ற நபரை கைது செய்துள்ளனர். செமரி மாவட்டம், தங்கவாடா காவல் நிலையத்தில் … Read more

ட்விஸ்ட்! வேலையை காட்டும் மம்தா பானர்ஜி.. இந்தியா கூட்டணி மீட்டிங்கிற்கு \"நோ\".. பாஜகவுடன் போக முடிவா

கொல்கத்தா: ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து உள்ளார். தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட Source Link

ராயல்டி விவகாரம்.. பின்னணி இதுதான்.. இளையராஜா தனியாக போராடுகிறார்!

சென்னை: தமிழ் சினிமாவில் எழுபதுகளில் தொடங்கி பல தலைமுறைகள் கடந்து அனைவராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் முடிசூடா மன்னாக இருக்கிறார் இசைஞானி இளையராஜா. சமூகவலைதளத்தில் அண்மைக்காலமாக இவரின் பெயர் ராயல்டி விவகாரம் தொடர்பாக பேசுபொருளாகி உள்ளது. இந்த காப்பி ரைட் விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ராயல்டி விவகாரத்தை பேசும் போது, இளையராஜா, எஸ்பிபி

இந்தியாவில் BYD சீல் எலக்ட்ரிக் கார் விநியோகம் துவக்கம்

இந்தியாவில் BYD Seal எலக்ட்ரிக் செடான் காரின் விநியோகத்தை தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக 200 கார்களை சென்னை, ஹைதராபாத் பெங்களூரு மற்றும் டெல்லி NCR, கொச்சி உள்ளிட்ட முன்னணி மெட்ரோ நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. சீல் எலக்ட்ரிக் ரூபாய் 41 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த மாடலில் அதிகபட்ச டாப் வேரியண்ட் ரூபாய் 53 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக 1.25 லட்சம் புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்பொழுது வரை 1,000க்கு அதிகமான முன்பதிவுகள் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே … Read more

Doctor Vikatan: மதியம் ஆரம்பித்து இரவில் உச்சம் தொடும் தலைவலி… காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு மதிய நேரத்தில் லேசாக தலைவலி ஆரம்பித்து மாலை நேரத்தில் அதிகரித்து இரவு ஒன்பது மணிக்கு உச்சத்தை அடைகிறது. வாந்தி எடுத்து  குடல் சுத்தமான  பிறகு தான் குறைகிறது. தலைவலி ஆரம்பிக்கும்போதே நான் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வேன். அப்படி எடுத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகி விடுகிறது. மாதம் ஒருமுறை இதுபோல் தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. தீர்வு என்ன? -kjprakash123, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா. நோய்க்குறியியல் … Read more