“உறுமய” திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

உறுமய காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆரம்ப முன்னெடுப்பு என ஜனாதிபதி தெரிவிப்பு. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு … Read more

எலும்பு முறிவு: வைகோவுக்கு 2 நாளில் அறுவை சிகிச்சை @ சென்னை அப்போலோ

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 2 நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழா திருநெல்வேலியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் வலது தோளில் லேசான … Read more

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

பெங்களூரு: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய பெண் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே 26) உயிரிழந்தார். “53 வயதான அந்தப் பெண், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (மே 26) இரவு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை… இந்த வாரம் விசாரணைக்கு ஆஜராவதாக தேவே கவுடா பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணா தகவல்…

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதே தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா தன் மீதான விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ-வில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரிகள் முன்பு இந்த வாரம் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வந்ததாக ப்ரஜ்வால் ரேவண்ணா மீது கடந்த மாதம் புகார் … Read more

பெற்றோரை சந்தித்த விஜய்… எஸ்.ஏ.சி முகத்தில் சிரிப்பை பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்து இருக்கும் இவர், கைவசம் உள்ள படத்தை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய மற்றும் சிறுநீரக நோய்ப் பிரிவு, ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கிற்கு வலுவான சுகாதார சேவையை வழங்க முடிந்துள்ளது. A9 வீதியில் பலப்படுத்தப்பட்ட இந்த நவீன வைத்தியசாலை கட்டமைப்பு, மருத்துவ சுற்றுலாவிற்கும் பெரும் பங்களிப்பு செய்யும் – ஜனாதிபதி தெரிவிப்பு. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக … Read more

“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம்” – டி.ராஜா கருத்து

ஈரோடு: ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசினார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான தியாகி சி.எஸ் சுப்பிரமணியம் நினைவாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சிஎஸ்எஸ் அரங்கம் (மார்க்சியப் பள்ளி மற்றும் நூலகம்) திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு, … Read more

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் – செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. 2024 ஜூன் மாதத்துக்கான மாதாந்திர மழை மற்றும் வெப்பநிலை முன்னறிவிப்பையும் டெல்லியில் மெய்நிகர் ஊடக உரையாடலில் வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் … Read more

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் : 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

திருநெல்வேலி நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மர்ம மரணம் குறித்த விசாரணைக்காக 30 க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2 ஆம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் காணாமல் போனதாக அவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். … Read more

டெல்லியில் திரளும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்.. ஆப்சென்ட் ஆகும் மம்தா பானர்ஜி.. இதுதான் காரணமாம்!

கொல்கத்தா: டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57 Source Link