வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 29 முதல் பயிற்சி வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன்

ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்ட்களின் பட்டியல் அளித்தால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024 : சாம்பியன் கேகேஆர் முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பரிசு தொகை எவ்வளவு?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 பெரும் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரன்னர்-அப் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம், KKR 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையைப் பெற்றது. SRH அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதுதவிர ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் … Read more

இன்று ஆளுநர் தலைமையில் பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

ஊட்டி இன்று ஊட்டியில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பல்கல்லைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிரது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாட்டைஇன்றும், நாளையும்  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுந்ர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் … Read more

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.. ஆந்திராவில் லாரி – கார் மோதல்.. 4 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை Source Link

தீபாவிற்கு துரோகம் செய்யும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யாவின் அப்பா மருத்துவமனையில் இருப்பது தெரிந்து, தீபாவும் கார்த்திக்கும் அவரை பார்க்க வருகின்றனர். அந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று அப்பா சொல்ல ரம்யா

திருப்பதி அருகே பயங்கர விபத்து: 4 பேர் பலி

திருப்பதி, ஆந்திரா மாநிலம், நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். இதன் பின் அவர்கள் சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களது கார் சந்திரகிரி மண்டலம், எம்.கெங்காரவாரப்பள்ளி அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தூர்- நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் அவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 … Read more

கிணற்றிலிருந்து மீட்ட தீயணைப்பு வீரர்கள் – விடாமல் கொஞ்சி விளையாடிய நாய்… கோவையில் நெகிழ்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே காரச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சுமார் 80 அடியில் ஒரு கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று அந்தக் கிணற்றில் எதிர்பாராத விதமாக கருப்பசாமி என்பவரின் நாய் தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்த நாய் கொட்டித்தீர்த்த கோடை மழை; சாலைகளைச் சூழ்ந்த மழை நீர்… குளிர்ந்த கோவை! – Photo Clicks கிணற்றில் தண்ணீர் இல்லை. இருந்தபோதும் நாயால் வெளியே வரமுடியாமல் தவித்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு … Read more

“3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்” – அண்ணாமலை

சென்னை: “3-வது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள்.” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற … Read more

ஜம்மு காஷ்மீரில் ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், மது உள்ளிட்டவற்றை கொடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு இதுவரை ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை … Read more