சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..

Latest News Breast Milk Sold Illegally : சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்ற மருந்து மொத்த சில்லறை விற்பனை வணிக மையத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.   

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வரும் சூப்பரான 7 அப்டேட்கள்… கூகுள் அறிவிப்பு

Google Upcoming Updates On Android: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் என்றாலே ஆண்ட்ராய்ட் மூலம் இயங்கும் மொபைல்தான் அதிகமாக உள்ளன. ஆப்பிள் ஐபோனும் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.  கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன் மூலம், அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அதாவது, ஐபோன் மொபைலிலேயே … Read more

நான் மீண்டும் சிறைக்கு சென்றதும் என்னை மேலும் துன்புறுத்த முயல்வார்கள் : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் மீண்டும் சிறைக்கு சென்றதும் தம்மை பாஜகவினர் மேலும் துன்புறுத்த முயவார்கள் எனக் கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த 10 ஆம் தேதி 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக … Read more

மாஸ் காட்டிய சூரி.. கருடன் படம் எப்படி இருக்கு.. பொதுமக்களின் கருத்து!

சென்னை: இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கருடன. சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் பார்த்த பொதுமக்கள் கருத்தை கேட்கலாம். கருடன் படத்தின் கதை: தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில்

பீகாரில் அதிகரிக்கும் வெப்பம்; தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் பலி

பீகார், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சமடைந்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி … Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தீகவாபிய புனரமைப்பு திட்டத்தை ஆய்வு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி ஆகியோர் 2024 மே 30 ஆம் திகதி ‘தீகவாப்பிய’ மற்றும் ‘நீலகிரிய’ புனரமைப்புத் திட்டத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் விஜயத்தை மேற்கொண்டனர். அதிதிகள் விகாரையின் … Read more

PM Candidate: “பிரதமர் பதவிக்கு எனது தேர்வு ராகுல் தான், ஏனென்றால்…" – கார்கே பேட்டி!

மூன்றாவது முறை பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டு களமிறங்கியது பா.ஜ.க. பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியோடு காங்கிரஸை பா.ஜ.க விமர்சித்து வந்தது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவது என்று முடிவு செய்தோம். கூட்டணி வெற்றி பெற்ற பிறகு யார் பிரதமர் என்பதை … Read more

கோடை வெயில் தாக்கம்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு தள்ளிவைப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், வரும் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை … Read more

வட இந்தியாவில் வெப்ப அலையால் 54 பேர் உயிரிழப்பு: டெல்லியில் புழுதிப் புயல் வீச வாய்ப்பு

புதுடெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் தெற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் முதல்முறையாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாட்டிலேயே உச்சபட்ச வெப்பஅலை டெல்லியில் வீசி வருவதாக வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் … Read more

“சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்” – ட்ரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு

நியூயார்க்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார். “நாட்டின் முன்னாள் அதிபர் இதுபோன்ற விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்தே தெரிகிறது இந்த தீர்ப்பில் அரசியல் உந்துதல் உள்ளது என்று. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது” … Read more