பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்ல தடை

ராமேசுவரம்: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்தும், தூத்துக்குடி, கன்னியாகுமாரி தென்பகுதி துறைமுகங்களுக்கும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரயில், சாலை பாலங்கள் வழியாக வங்கக் கடலில் பயணித்து வருகின்றன. இந்த கப்பல்கள் பாம்பன் பகுதியில் மன்னார் … Read more

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

புதுடெல்லி: தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை … Read more

IPL Finals: பைனலில் மிக மிக குறைந்த ஸ்கோர் – ஈஸியாக கப் அடிக்கப் போகிறதா கேகேஆர்?

KKR vs SRH IPL Finals 2024: 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்களில் ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. Innings Break! A relentless bowling effort in the #Final from Kolkata Knight Riders  Ato achieve glory Can #SRH turn things around things around with the ball? Scorecardhttps://t.co/lCK6AJCdH9#TATAIPL | #KKRvSRH | #TheFinalCall pic.twitter.com/DLqIvWQoKf — IndianPremierLeague (@IPL) May 26, … Read more

சோனியா, ராகுலின் செல்ஃபியில் இயேசு படமா? : உண்மை வெளியானது

டெல்லி சோனியா மற்றும் ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு படம் உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது. நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த … Read more

வளையம் பட சூட்டிங் நிறைவு.. பிரியாணி விருந்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இது என்ன புது ட்ரெண்ட்!

 சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படத்தில் சிறிய கேரக்டர்மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். தொடர்ந்து இவரை காக்கா முட்டை படம் அடுத்த களத்தில் கொண்டு சென்றது. அழுத்தமான கதைகலங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

XUV 3XO எஸ்யூவி விநியோகத்தை துவங்கிய மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO விற்பனைக்கு வெளியிடப்பட்ட எஸ்யூவி முதல் ஒரு மணி நேரத்தில் 50,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற நிலையில் டெலிவரி இன்று முதல் துவங்கியுள்ளது. வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு நிறங்களும் அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், AX5 மற்றும் AX5 L உள்ளிட்ட நடுத்தர வேரியண்டுகள் முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட்டுள்ளது. மேலும் டாப் வேரியண்டுகளுக்கு அதிகபட்சமாக  3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. பிரசத்தி பெற்ற 4 மீட்டர் … Read more

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்

முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி முறையை மீண்டும் உருவாக்க நடவடிக்கை. ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோரிக்கை. கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக … Read more

IPL Finals : `அந்த ஒரு விஷயம் க்ளிக் ஆனா…' – கம்மின்ஸ் உறுதி!

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸூம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை சன்ரைசர்ஸ் அணி வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாகவும் அறிவித்தார். KKR v SRH இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தே ராஜஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. டாஸில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியவை இங்கே. டாஸை … Read more

கூடலூர் அருகே வீட்டில் பிடிபட்ட சிறுத்தை முதுமலை வனத்தில் விடுவிப்பு

முதுமலை: கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை கிராமத்தில் வீட்டில் பதுங்கி இருந்து, பிடிப்பட்ட சிறுத்தை முதுமலை வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் இடும்பன் என்பவரது வீட்டில் நேற்று சிறுத்தை ஒன்று பதுங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) மேற்பார்வையில் வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். முதுமலை புலிகள் காப்பகம், வனக் கால்நடை உதவி … Read more

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் பதவிக் காலத்தை வரும் ஜூன் 30 வரை நீட்டித்து நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்களை முடிவு செய்யும் இந்தக் குழுவானது எடுத்துள்ள அரிதான முடிவு என அறியப்படுகிறது. முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி ஜி.ஜி.பீவூருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து இந்திரா காந்தி அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் தற்போது மனோஜ் பாண்டே பதவிக் காலம் … Read more