சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரள அரசை கண்டித்து உடுமலையில் விவசாயிகள் சாலை மறியல்

திருப்பூர்: சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து உடுமலை அருகே கேரளா செல்லும் சாலையை மறித்து தமிழக விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் கேரள அரசு சிலந்தி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் … Read more

“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது” – பிரதமர் மோடி பேச்சு @ உத்தரப் பிரதேசம்

மிர்சாபூர்(உத்தரப் பிரதேசம்): “எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமானஉறவு மிகவும் ஆழமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சமாஜ்வாதி கட்சிக்காக யாரும் தங்களின் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள். வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யார் ஆட்சியமைக்க இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சாமானியர்கள் வாக்களிப்பார்கள். இண்டியா கூட்டணியினர் … Read more

தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?

Actor Karthi Vaa Vaathiyaar Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி, தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார்? இவர்கள் நடிக்கும் படம் என்ன? இங்கு பார்ப்போம்.   

EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்… காரணம் என்ன?

Hybrid Cars Sales In India 2024: இந்திய சந்தையில் EV கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து பல நிறுவனங்கள் EV கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். SUV கார்களிலும் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் விற்பனையில் உள்ளன. அதாவது, பெட்ரோசல் அல்லது டீசல் எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றால் இயங்கக்கூடியவை.  SUV கார்களில் EV மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் தற்போது விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றனர். மாருதி சுசுகி, டோயோட்டா மோட்டார் ஆகிய … Read more

மதிமுக பொதுச்செயலர் வைகொ எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு தோள்பட்டையி எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். இன்று துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் … Read more

காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்.. 28 பேரை காவு வாங்கிய குஜராத் தீ விபத்து.. திடுக்கிட வைக்கும் தகவல்

ராஜ்கோட்: தீ விபத்தால் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த குஜராத்தின் ராஜ்கோட் கேமிங் ஜோன் நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டும் இன்றி ஒரே ஒரு அவசர வழிபாதை மட்டுமே அந்த மைதானத்தில் இருந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ Source Link

உன்னால உலகம் அழகாச்சு.. குட்டி ஸ்கர்ட்டில் நச்சுனு போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்!

சென்னை: விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூன்றாவது மகள் ஸ்ரீ தேவி. குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் நடித்த ரிக்சா மாமா திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை சூடேத்தும் வகையில் அட்டகாசமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், ஹீரோயினாக இயக்குனர் கதிர் இயக்கத்தில்,

தீவிர புயலாக வலுப்பெற்றது 'ரிமால்'

புதுடெல்லி, வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள ரிமால் புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றது. 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ரிமால் புயல். தற்போது தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. தீவிரப்புயலாக வலுப்பெற்ற நிலையில் ரீமல் புயல் அதி தீவிரப்புயலாக மேலும் தீவிரமடையும். அதி தீவிரப்புயலாக கரையை கடக்கும் நிலையில் மணிக்கு 135 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், வங்காள தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர் தீவு, … Read more

என்னுடைய பேச்சை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை – பி.சி.சி.ஐ. முடிவு குறித்து ஸ்ரேயாஸ் வருத்தம்

கொல்கத்தா, நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் முன்னேறி உள்ளன. இந்த வருடம் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி பைனல் வந்துள்ளது. ஏற்கனவே 2020 சீசனில் டெல்லியை பைனலுக்கு அழைத்து வந்த அவர் கொல்கத்தா அணியிலும் அசத்தி வருகிறார். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் 500-கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியா … Read more

நான் ஏலியன்தான்… நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க்

பாரிஸ்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், பாரிசில் நடைபெற்ற விவா தொழிநுட்ப நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, அவரது தோற்றம் வேற்றுகிரகவாசி போன்று இருப்பதாக (ஏலியன்) சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்டே கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க், “நான் ஒரு வேற்றுகிரகவாசிதான். இதை சொல்லிக்கொண்டே வருகிறேன். ஆனால் யாரும் என்னை நம்பவில்லை” என்றார். பூமியில் வேற்றுகிரகவாசிகள் பற்றி நடக்கும் விவாதம் குறித்து பேசிய அவர், … Read more