வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களை கொண்டு மணல் சிற்பம்

பூரி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களைக் கொண்டு மணற் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘உங்கள் வாக்கு உங்கள் குரல்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது … Read more

ஹர்திக் – நடாசா விவகாரத்து உண்மையா? தீயாக பரவும் தகவல் – உண்மை இதுதான்

ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ஆனால், அது வதந்தியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் காதலித்து மே 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர நம்பதிக்கு அகஸ்திய பாண்டியா என்ற 3 வயது மகனும் இருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வருகிறது. … Read more

நேற்றைய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவு

டெல்லி நேற்றைய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்  கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல்  கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும்  நடைபெற்றது நேற்று ஆறாம் கட்ட … Read more

27 உயிர்களை பலி வாங்கிய தீ விபத்து! சோகத்தில் குஜராத்! விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

காந்திநகர்: குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத Source Link

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

சென்னை: எம்டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியை நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் இந்த சீசனில் தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். மிஸ்சீஃப் மேக்கர் எனும் குழப்பவாதி ரோலில் உர்ஃபி ஜாவேத் வேறலெவல் குழப்பங்களை காதலர்களுக்கு இடையே உண்டு பண்ணி வருகிறார்.

துறை செயலர்கள் பேச்சுவார்த்தை எதிரொலி: முடிவுக்கு வந்த போக்குவரத்து ஊழியர் – காவலர் மோதல்

சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் 2 நாட்களாக அபராதம் விதித்தனர். இந்தத் தொகையை தங்களதுபணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக ஆந்திராவில் மாவட்டம்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்

விஜயவாடா: ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஆந்திராவுக்கு 25 கம்பெனிதுணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூன் 19-ம் தேதி வரைஅவர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன்4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது, வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு துணை எஸ்பி, டிஎஸ்பி போன்ற சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா நேற்று கூறினார். … Read more

இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

நியூயார்க்: இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’ நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ரான் சோமர்ஸ் பேசியதாவது: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் தேர்தல்நடைமுறை வியப்பைத் தருகிறது. உலகமே இந்தியாவின் தேர்தலை உற்று நோக்குகிறது. … Read more

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு… கோவையில் NIA போஸ்டர்

Thiruppuvanam Ramalingam murder NIA reward poster ; திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என கோவை மாநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புள்ளம், பூதங்குடி, வல்வில்ராமர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புள்ளம், பூதங்குடி, வல்வில்ராமர் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 10 வது திவ்ய தேசம். பொது தகவல்: இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். … Read more