பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு! அப்படியே புதைந்த ஆயிரக்கணக்கான வீடுகள்! 300க்கும் அதிகமானோர் பலி

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 1,100 பேருக்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் புதைந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள காகலம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. Source Link

மாநாடு எஸ்.ஜே.சூர்யா நடித்த ரோலில் இத்தனை பேர் நடிக்கவிருந்தார்களா?.. லிஸ்ட் பெருசா போகுதே

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. கோலிவுட்டில் சில

ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும். நாடாளுமன்ற … Read more

தொடர்ச்சியாக வென்று வேகத்தைப் பெற்றால் மட்டும் போதாது – ஆர்.சி.பி. தோல்வி குறித்து கம்பீர்

பெங்களூரு, இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. நடப்பு சீசனின் ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறிய அந்த அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் இம்முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆர்சிபி அணியின் வேகத்தை பார்த்துதான் தாங்களும் … Read more

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து; தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை – விசாரணையில் தகவல்

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக … Read more

₹ 3.30 கோடியில் மெர்சிடிஸ் AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் வெளியானது

இந்தியாவில் ரூ.3.30 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள S-Class வரிசையில் இடம்பெற்றுள்ள AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் மாடலை தவிர கூடுதலாக ரூ.3.80 கோடியில் S63 E Performance Edition 1 சிறப்பு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு S63 E Performance Edition 1 குறிப்பிட்ட எண்ணிக்கையில் Manufaktur Alpine Grey நிறத்தை பெற்று மேட் பிளாக் நிறத்தை கொண்ட 21 அங்குல வீல் ஃபோர்ஜ்டூ பெற்றதாக அமைந்துள்ளது. AMG எக்ஸ்குளூசிவ் அம்சங்களை பெற்று பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை … Read more

BCCI: `இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியா?' – தெறித்து ஓடும் ஜாம்பவான்கள்; காரணம் என்ன?

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதம் ஆகிறது. வரும் 27-ம் தேதியோடு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் முடிகிறது. இதற்கிடையில், பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவது குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். BCCI சொல்லி வைத்தாற்போல எல்லாருமே இந்தப் பதவியின் மீது விருப்பம் காட்டாதவாறே பேசியிருக்கின்றனர். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளுள் இந்தியாவும் ஒன்று. உலகின் செல்வாக்குமிக்க கிரிக்கெட் போர்டுகளில் தலையாயது பிசிசிஐ. … Read more

போலீஸ், பஸ் தொழிலாளர்கள் மோதல் முடிவுக்கு வருமா..? பின்னணியில் யார்?

போலீஸ் சீருடையில் இருக்கும் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் கறார் காட்டுவதும், சீட் பெல்ட் போடவில்லை என்று பஸ் ஓட்டுனர்கள் மீது காவல் துறை புகார் பதிவு செய்வதும் இரண்டு துறைக்கு இடையில் மோதலை உருவாக்கி வருகிறது. Source link

போக்குவரத்து துறை vs காவல் துறை: பிரச்சினைக்குத் தீர்வு காண துறை செயலர்கள் பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.காவலர்கள் … Read more