SRH vs RR: போராடிய ராஜஸ்தான் சுழலில் சுருட்டிய கம்மின்ஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்!

எலிமினேட்டரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றதால், இந்தப் போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், குவாலிஃபயரில் கொல்கத்தா அணியிடம் தோற்றாலும், இப்போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், பக்கத்து வீட்டு சண்டையை பகுமானமாக ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சென்னை, மும்பை அணி ரசிகர்களுக்கும் சென்னையில் நடந்த இந்த குவாலிபையர் போட்டி முக்கியமானதாக இருந்தது. SRH vs RR … Read more

அரசு பேருந்துகளுக்கு 2-வது நாளாக அபராதம்: போக்குவரத்து போலீஸை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சாலை விதிகளை மீறியதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து போலீஸார் நேற்று இரண்டாவது நாளாகஅபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சீருடையில் பயணித்த காவலரிடம் எப்படி டிக்கெட் எடுக்க சொல்லலாம் என போலீஸாரும், வாரன்ட் இருந்தால் மட்டுமே போலீஸாருக்கு கட்டணமில்லா பயணம் … Read more

‘கடவுளால் செய்ய முடியாத செயல்கள்’ – மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார். நான் கேட்கிறேன், கலவரத்தைத் தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாகப் பொய்களை பரப்பவும், என்ஆர்சியை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் … Read more

Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடு

ஆர்சிபி அணி 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லாததற்கான முக்கிய காரணத்தை அம்பத்தி ராயுடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த அணியில் உண்மையிலேயே எத்தனை பல நல்ல பிளேயர்கள் இருந்ததார்கள், பின்னர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த அணி நிர்வாகம் பார்க்க வேண்டும் என சுருக்கென தனக்கே உரிய பாணியில் காரசாரமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு கிரிக்கெட் வட்டாரத்திலும், ஆர்சிபி அணியின் வட்டாரத்திலும் வெந்த புண்ணில் வேல் ஒன்றை பாய்ச்சியதுபோல் இறங்கியுள்ளது. இந்த … Read more

அட! ஆப்பிள் ஐபேட் வெறும் 30 ஆயிரம் ரூபாய்.. பிளிப்கார்ட், அமேசானில் தேடாதீங்க – முழு விவரம்

ஆப்பிள் ஐபேட் வாங்க இப்போது உங்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதுவும் வங்கிச் சலுகை உள்ளிட்டவற்றுடன் நீங்கள் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபேட் வாங்கும் கனவை நனவாக்கலாம். அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இப்போது எந்த விற்பனைகளும் நடைபெறாத நிலையில், அங்கு உங்களுக்கு தள்ளுபடிகளும், சலுகைகளும் கிடைக்காது. ஆனால், Croma மூலம் தள்ளுபடி விலையில் ஆப்பிள் ஐபேட் வாங்கும் கனவை நீங்கள் நனவாக்கலாம். ரூ.33,900 -க்கு ஆப்பிள் ஐபேட் இப்போது ஆன்லைன் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.  உங்களிடம் … Read more

OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்! உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மமதா பானர்ஜி மேல் முறையீடு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலிலிருந்து பல பிரிவுகளை நீக்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிதிருந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என மமதா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 42 பிரிவினர் இதர Source Link

என்ன மாமா சௌக்கியமா?.. நடிகர் கார்த்தி பிறந்தநாள்.. சொத்து மதிப்பு தெரியுமா?.. வேற லெவல்

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இன்று அவர் தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பிரேம்குமார் இயக்கத்தில் அவர்

அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடம்

நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார். யூபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், அது யுபுன் அபேகோனின் தனிப்பட்ட சிறந்த பெறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது    

ரசாயன விவசாய முறை, இயற்கை விவசாய முறை எது சிறந்தது? ஜெர்மன் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கும் பயிர்களுக்கும் இயற்கை விவசாய முறையில் வளர்க்கும் பயிர்களுக்கும் மரபணு ரீதியாக வித்தியாசம் இருப்பதை நீண்ட ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு கண்டறிந்துள்ளது ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழகம் (University of Bonn). ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வயல்களில் பார்லி பயிர்களை நட்டு, ஒன்றில் ரசாயன விவசாய முறைகளையும் மற்றொன்றில் இயற்கை விவசாய முறைகளையும் பயன்படுத்தினர். 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பார்லி செடிகள் மரபணு ரீதியாக செறிவூட்டப்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால், நீதிமன்ற அவமதிப்புவழக்கு உட்பட வலுவான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்று உறுதிபட தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாக காரணம் காட்டி, அந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. … Read more