பூத் வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், … Read more

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து… தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது… வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. கிரெட்டான் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் கேதார்நாத் ஹெலிபேடில் இருந்து 6 பேருடன் பறக்க தயாரானது. இந்த ஹெலிகாப்டர் உயரே பறக்க துவங்கிய சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து அந்தரத்தில் வட்டமடித்தது. இதனையடுத்து இந்த ஹெலிகாப்டரை தரையிறக்க அதன் விமானி முயற்சித்ததை அடுத்து அந்த ஹெலிபேடில் காத்திருந்த மற்ற பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். Narrow … Read more

டாப் கியர் போட்டுத் தூக்கும் அஜித் குமார்.. ஏகே 64 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்.. அட அவரா?

சென்னை: அஜித்தின் 62-வது படமான விடாமுயற்சி திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63-வது படமான குட் பேட் அக்லி படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படம்

தமிழகத்தில் நடப்பாண்டில் 109 பேரின் உடல் உறுப்புகள் தானத்தால் 642 பேருக்கு மறுவாழ்வு

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 109 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு 642 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியது: “இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. அதனால், இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் … Read more

பாஜக செய்தி தொடர்பாளராக நியமனமா? – பிரசாந்த் கிஷோர் மறுப்பு

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு வெற்றி கிடைக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து இவரை பாஜக.,வின் தேசிய செய்தி தொடர்பாளராக, பாஜக தலைவர் ஜே.பி நட்டா நியமித்துள்ளார் என்ற கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்திருந்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சூரஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள … Read more

48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து கட்ட தேர்தல் வா நடந்துள்ளன. நாளை ஆறாவது கட்ட வாக்குப்பதிவும்ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. எனவே … Read more

தங்கச்சியை கல்யாணம் பண்ணக் கூடாதா?.. ஹாட் ஸ்பாட் ரியல் கிளைமேக்ஸ்.. டிரெண்டாகும் டெலிட்டட் சீன்!

சென்னை: விக்னேஷ் கார்த்திக் இயக்கி நடித்த ஹாட்ஸ்பாட் திரைப்படம் அதன் டிரைலர் கட் காரணமாகவே தியேட்டருக்கு ரசிகர்களை வரவிடாமல் செய்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு என கொண்டாடி வருகின்றனர். படம் நல்லா இல்லை

கொழும்பு நகரில் பல்வேறு வெசாக் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கங்காராம விகாரையின் வருகை தந்த ஜனாதிபதி, அங்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், கங்காராம விகாரையின் விகாராதிகாரி வண, கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், … Read more

கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு: காவல் துறை, மின்வாரியம் விசாரணை

கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து காவல் துறையினர், மின் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ராமன் விகார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இக்குடியிருப்பில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாட்டின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணிபுரிபவர்கள் இங்கு வீடுகளை வாங்கி வசித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் … Read more

“டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” – பிரதமர் மோடி

குர்தாஸ்பூர்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்படுத்தி வருவதாக வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தது. “பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநில முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. ஜுன் 1-ம் … Read more