Smartphones Release In June 2024: இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. பலவகை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இறங்குகின்றன. தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் வருகை என்பது அதிகரித்துள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது வரம்பற்ற வகையில் 5ஜி இணைய சேவையை வழங்கி வருவதால் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் OnePlus, Xiaomi, Redmi, Honor உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய மொபைலை அறிமுகம் செய்கின்றன. மேலும், Lava நிறுவனத்தின் Yuva 5G மொபைலும் இந்த மாதம் வெளியாக உள்ளது. Vivo நிறுவனத்தினன் முதல் Foldable ஸ்மார்ட்போனும் இந்த ஜூன் முதல் வாரத்திலேயே அறிமுகமாக உள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
OnePlus 12 Glacier
இந்த மொபைல் ஜூன் 6ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 2K ரெஸ்சோல்யூஷன் உடன் 6.82 இன்ச் 120Hz ரெப்பரஷ் ரேட் உடன் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதில், 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ பிரதான லென்ஸுடன், 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது. Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வருகிறது. மேலும் இது 100W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. மேலும் இது 5,4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது Android 14 OS மூலம் இயங்குகிறது.
Redmi 13 Series
Redmi 12 சீரிஸை, Redmi 13 மாடல்களுக்கு அடுத்ததாக வருகிறது. இந்தத் தொடரின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாகவில்லை. இது அதிக ரெப்ரேஷ் ரேட் டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் குறைந்த தரம் கொண்ட ஆக்டா-கோர் சிப்செட் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனம் பெரிய பேட்டரியை கொண்டது. இது ஆண்ட்ராய்டு 14 மூஸம் இயங்கும்.
Xiaomi 14 CIVI
இந்த மொபைல் தான் இந்தியாவில் முதல் Xiaomi Civi ஸ்மார்ட்போன் ஆகும். ஜூன் 12ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும். இது 120Hz ரெப்ரேஷ் ரேட் கொண்ட 6.55-இன்ச் குவாட்-வளைந்த டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மொபைலில் டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50MP மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Snapdragon 8s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். 67W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.. இது ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயக்கப்படுகிறது.
Honor 200 Series
இந்த சீரிஸில் Honor 200 மற்றும் Honor 200 Pro என இரண்டு போன்களைக் கொண்டுள்ளது. இரண்டுமே 6.7-இன்ச் 120Hz ரெப்ரேஷ் ரேட் கொண்ட வளைந்த திரைகள், டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பு இதில் கிடைக்கிறது. Snapdragon பிராஸஸர் இதில் கிடைக்கிறது. ப்ரோ மாடல் Snapdragon 8s Gen 3 மூலமும், Honor 200 மாடல் Snapdragon 7 Gen 3 SoC மூலமும் இயக்கப்படுகிறது. இரண்டும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஜூன் 12ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பாரிஸில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இருப்பினும், விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இது தற்போது சீனாவில் ஏற்கெனவே கிடைக்கிறது.
Vivo X Fold 3 Pro
ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 6.53-இன்ச் செகண்டரி/கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயங்குகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,700mAh பேட்டரி உள்ளது. இதில் 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உட்பட 50MP மூன்று பின்பக்க கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு சீனாவில் அறிமுகமானது, இறுதியாக இந்திய சந்தைக்கு வரவுள்ளது.