சென்னை: சென்னையில் புரோட்டீன் பவுடர் என்ற பெயரில் தாய்ப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தாய்க்கால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்களை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் […]