மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேசபக்தி பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பல்விந்தர் சிங் சாப்ரா. இவருக்குக் கடந்த 2008-ம் ஆண்டு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, இந்தூரின் ஃபுட்டி கோதி பகுதியில் ‘கிராந்தி யோகா’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், ராணுவ சீருடையில் பல்வீந்தர் சிங், தேசபக்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடிக் கொண்டிருந்தார். அவர் கையில் மூவர்ணக் கொடியுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். கையில் மூவர்ணக்கொடியுடன் சரிந்தபோதும், அவர் பாவனை செய்வதாக நினைத்து, அங்கிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
Video Shows Retired Soldier Dancing With Tricolour on Patriotic Song Dies of Heart Attack in Indore#ViralVideo #SoldierDiesOfHeartAttack #HeartAttack #Indore #MadhyaPradesh #SoldierDiesOfHeartAttackhttps://t.co/kxIXi51UUF pic.twitter.com/xYuO0wd6vv
— Republic (@republic) May 31, 2024
ஆனால் சிறிது நேரம் கழித்தும் அவர் கண் விழிக்காததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். எனினும் அவர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவர் நடனமாடி மயக்கமுற்று விழும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் சீருடையுடனே, கையில் மூவர்ணக்கொடியையும் ஏந்தியபடியே இறந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb