Splendor Plus Xtec 2.0 Price And Mileage: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இருச்சக்கர வாகனங்களில் Splendor பைக் எப்போதும் முன்னிலை வகிக்கும். மாப்பிள்ளை சீதனத்தில் தொடங்கி பல விஷயங்களில் இந்திய குடும்பங்களிலும் Splendor மாடல் பைக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோக இருச்சக்கர வாகனத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாடல் Splendor ஆகும். தேசம் முழுவதும் மிகவும் நம்பிக்கைக்குரிய மாடலாக Hero Motorcorp நிறுவனத்தின் Splendor உள்ளது. முன்னதாக, Hero Honda Splendor மாடல் வெளிவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Splendor பைக்
Splendor பைக்கின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பட்ஜெட் விலையும், அதன் குறைந்த பராமரிப்பு செலவும்தான். Splendor பைக்கில் நீங்கள் ஒரு லிட்டர் போட்டால் வீட்டு உபயோகத்திற்கு சுமார் 70 கி.மீட்டருக்கும் மேல் மைலேஜ் கிடைக்கும். இதனால், உள்ளூரில் வியாபாரிகள், மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் முகவர்கள் தொடங்கி, தங்கள் பணியில் அதிக தூரம் பைக்கில் செல்ல வேண்டிய தேவை உள்ள அனைவரும் Splendor பைக்கை தான் தேர்வு செய்வார்கள்.
Splendor பைக் அந்த இமேஜை இன்றும் தொடர்ந்து வருகிறது. காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றங்களை செய்து இன்னும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மைலேஜ் அதிகம் கொடுப்பதால் பெட்ரோல் செலவை கணக்கில் கொண்டு கீழ் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோர் இந்த பைக்கை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் நாட்டில் அதிக மக்கள் தொகைய மக்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். எனவே, இது அவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
புது பொழிவுடன் Splendor
இந்நிலையில், Hero Motorcorp நிறுவனம் அதன் Splendor Plus Xtec 2.0 பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஹெட்லைட் பகுதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த லைட் அமைப்பும் எல்இடி ஆக மாற்றப்பட்டுள்ளது. இது 2.0 மாடலாகும். இதற்கு முந்தைய வெர்ஷனை விட இந்த வெர்ஷன் புதிய பொழிவுடன் வந்துள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் விவரங்களை இங்கு காணலாம்.
இந்த பைக்கில் சமீபத்தில் நவீன அம்சங்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது எனலாம். குறிப்பாக, எல்இடி ஹெட்லைட் உடனும், முழுமையான டிஜிட்டல் மீட்டர்களுடன் வருகிறது. இதில் ஸ்மார்ட்போனை இணைத்துக்கொள்ளலாம். USB சார்ஜிங் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் Splendor மாடலிலும் வந்துள்ளது வாடிக்கையாளர்களை இன்னும் ஈர்க்கும் எனலாம்.
இந்த பைக் 100cc சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் கொண்டது. 7.09bhp பவர் மற்றும் 8.05Nm உச்ச முறுக்குவிசையுடன் வருகிறது. இதில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதே எஞ்சின்தான் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இது பெட்ரோல் சிக்கனத்தை கடைபிடிக்கிறது எனலாம். இதன் பராமரிப்பு செலவும் குறைவு.
மைலேஜ் மற்றும் விலை
அதாவது 6000 கி.மீ., ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது. பட்ஜெட்டில் நவீன அம்சங்களுடனான பைக் வாங்க விரும்புவோர் இதனை வாங்கலாம். குறிப்பாக, இந்த Splendor பைக்கும் எளிமையான வடிவமைப்பை கொண்டதாகும். Telescopic Front Forks உடனும், இரட்டை ரியர் ஷாக்ஸ் உடனும் வருகிறது. அலாய் சக்கரங்களுடன் இதன் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த Splendor Plus Xtec 2.0 பைக்கின் மைலேஜ் 73 கி.மீ., ஆகும். இந்த பைக்கின் விலை 82 ஆயிரத்து 911 ரூபாயாகும். அதாவது கடந்த மாடலை விட இந்த புதிய Splendor Plus Xtec 2.0 பைக்கை விட 3 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.