முடிவுக்கு வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ

ஆட்டோமொபைல் உலகின் மிக முக்கியமான கண்காட்சியாக விளங்கி வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ (Geneva International Motor Show – GIMS) காலவரையின்றி முடிவுக்கு வந்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியாக 1905 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த ஜெனிவா மோட்டார் ஷோ நடப்பு 2024 ஆம் ஆண்டில் நடைபெற்றாலும் வெறும் 23 தயாரிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முடிவை GIMS எடுத்துள்ளது.

ஆனால் 2023 முதன்முறையாக கத்தார் தலைநகரில் நடைபெற்ற GIMS Doha ஷோ வெற்றி பெற்றதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக அடுத்த ஆண்டு நவம்பர் 2025ல் நடைபெற உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் சுமார் 6,00,000 பார்வையாளர்களுக்கு மேல் சுமார் 120 ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் பங்கேற்ற நிலையில் கோவிட்-19 பெருந் தொற்று தாக்குதலுக்கு பின்னர் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்த துவங்கியுள்ளனர்.

GIMS தலைவர் Alexandre de Senarclens இது பற்றி கூறுகையில் “உற்பத்தியாளர்களிடமிருந்து ஆர்வமின்மை” மற்றும் பாரிஸ் மற்றும் முனிச் நிகழ்ச்சிகளில் இருந்து வளர்ந்து வரும் போட்டி “எதிர்கால பதிப்பிற்கான முடிவுக்கு முக்கிய காரணம்” என குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.