சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம்:
சிஎன்என் – நியூஸ் 18:
திமுக கூட்டணி: 36 – 39
அதிமுக கூட்டணி: 0-2
பாஜக கூட்டணி 1-3
இண்டியா டுடே:
திமுக கூட்டணி 26 -30
அதிமுக கூட்டணி 0 -2
பாஜக கூட்டணி 1 – 3
ஜன் கி பாத்:
திமுக கூட்டணி 34 – 38
அதிமுக கூட்டணி – 1
பாஜக 5+
ஏபிபி சி வோட்டர்:
திமுக கூட்டணி 37 – 39
அதிமுக கூட்டணி – 0
பாஜக கூட்டணி – 2
இந்தியா டுடே – ஆக்சிஸ்:
திமுக கூட்டணி – 33+
பாஜக கூட்டணி 2 முதல் 4
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேசிய அளவில் பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் முழு விவரம்: Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!
மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதாவது, திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது 1 அல்லது 2 இடத்திலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரபல நிறுவனங்களில் கருத்துக் கணிப்புகள் பின்வருமாறு: