What to watch on Theatre & OTT: கருடன், ஹிட் லிஸ்ட், Mr. And Mrs. Mahi; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கருடன் (தமிழ்)

கருடன்

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் அப்பாவி சூரி, ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பதற்காகக் காரணம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹிட் லிஸ்ட் (தமிழ்)

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இப்படத்தை சூர்யகதிர் காக்கள்ளர், கே.கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கின்றனர். சரத்குமார், கெளதம் மேனன், சமுத்திரகனி உள்ளிடோர் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

புஜ்ஜி at அனுப்பட்டி (தமிழ்)

புஜ்ஜி at அனுப்பட்டி

ராம் கந்தசாமி இயக்கத்தில் கார்த்திக் விஜய், லாவண்யா கன்மணி, மீனா கோபாலக்கிருஷ்ணன், கமல்குமார், பிரினிதி, வைத்தீஸ்வரி உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புஜ்ஜி at அனுப்பட்டி’. இரண்டு குழந்தைகள் ஆட்டுக்குட்டி ஒன்றை பாசத்துடன் வளர்க்கின்றனர். திடீரென அந்த ஆட்டுக் குட்டி காணாமல்போக, அதை தேடி அலைகிறார்கள். அவர்கள் அந்த ஆட்டுக் குட்டியைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் கதை. இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அகாலி (தமிழ்)

அகாலி (தமிழ்)

முகமது ஆசிஃப் ஹமீது இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார் ஜானகிராஜன், வினோத் கிஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகாலி’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Once Upon A Time In Kochi (மலையாளம்)

Once Upon A Time In Kochi

நதிர்ஷா இயக்கத்தில் முபின் எம் ரஃபி, அர்ஜுன் அசோகன், ஷைன் டாம் சாக்கோ, தேவிகா சஞ்சே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Once Upon A Time In Kochi’. ரொமான்டிக், திரில்லர் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gam Gam Ganesha (தெலுங்கு)

உதய் ஷெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா, நயன் சரிகா, பிரகதி, ராஜ் அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gam Gam Ganesha’. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Bhaje Vaayu Vegam (தெலுங்கு)

Bhaje Vaayu Vegam

பிரசாந்த் ரெட்டி இயக்கத்தில் கார்த்திகேயா, ஐஸ்வர்யா மேனன், ராகுல் ஹரிதாஸ், ரவி ஷங்கர் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhaje Vaayu Vegam’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gangs of Godavari (தெலுங்கு)

Gangs of Godavari

கிருஷ்ணா சைத்தன்யா இயக்கத்தில் விஷ்வக் சென், நேகா ஷெட்டி, அஞ்சலி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gangs of Godavari’. 1980 காலகட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் கதையான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mr. And Mrs. Mahi (இந்தி)

சரண் சர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், குமுட் மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mr. And Mrs. Mahi’. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் கதாநாயகன்,கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று தன்னைப்போலவே குறிக்கோள் கொண்ட பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்து, அப்பெண்ணின் கிர்க்கெட் கனவை சாத்தியப்படுத்தப் போராடுகிறார். இருவரும் தங்களின் கனவை நோக்கி காதலுடன் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Fast Charlie (ஆங்கிலம்)

Fast Charlie

பிபில் நொய்ஸ் இயக்கத்தில் பியர்ஸ் ப்ரோஸ்னன், மொரேனா பாக்கரின், ஜேம்ஸ் கேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Fast Charlie’. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர், ‘A’ ரேட்டட் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Strangers: Chapter 1 (ஆங்கிலம்)

The Strangers: Chapter 1

ரென்னி ஹர்லின் இயக்கத்தில் மேடலைன் பெட்ச், மேடலைன் பெட்ச், கேப்ரியல் பாஸோ, ரேச்சல் ஷென்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Strangers: Chapter 1’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி

House Of Lies (இந்தி)

House Of Lies

சௌமித்ரா சிங் இயக்கத்தில் சஞ்சய் கபூர், ரிதுராஜ் சிங், சசமில்லி சுர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘House Of Lies’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Dedh Bigha Zameen (இந்தி)

Dedh Bigha Zameen

புல்கட் இயக்கத்தில் பிரதிக் காந்தி, குஷாலி குமார், துர்கேஷ் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dedh Bigha Zameen’. குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளப் போராடும் சாமானிய இளைஞனின் கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘JIo Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வெப்சீர்ஸ்

உப்பு பிளி காரம் (தமிழ்) – Disney + Hotstar

ரமேஷ் பாரதி இயக்கத்தில் பொன் மணிவண்ணன், தீபிகா வெங்கடாசலம், வனிதா கிருஷ்ணச்சந்திரன், ஆயிஷா ஜீனத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘உப்பு புளி காரம்’. கணவன், மனைவி, அவர்களின் நான்கு பிள்ளைகள் எனக் குடும்பத்தில் நடக்கும் ஜாலியான வெப்சீரிஸான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

Panchayat Season 3 (இந்தி) – Amazon Prime Video

Panchayat Season 3

சந்தன் குமர் எழுத்தில் தீபக் குமார் மிஷ்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப்சீர்ஸ் ‘Panchayat’. ஜீதேந்திர குமார், ரகுபீர் யாதவ், நீனா குப்தா, சந்தன் ராய் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிராமத்தில் நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட சுவாரஸ்யாமான இந்த வெப்சீரிஸ் இரண்டு சீசன்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்துத் தற்போது இதன் மூன்றாவது சீசன் ‘Amazon Prime Video’ வெளியாகியுள்ளது.

Illegal season 3 (இந்தி) – Jio Cinema

Illegal season 3

சுஹீர் ரஷா இயக்கத்தில் பியூஷ் மிஸ்ரா, நேஹா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘illegal season 3’. கோர்ட் ட்ராமா வெப்சீரிஸான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bujji and Bhairava (தமிழ், தெலுங்கு, இந்தி) – Amazon Prime Video

Bujji and Bhairava

நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாகி வரும் திரைப்படம் `Kalki 2898 AD’. இப்படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இரண்டு பாகங்களைக் கொண்ட அனிமேஷன் வெப்சீரிஸ் இந்த ‘Bujji and Bhairava’. ஜாலியான, சயின்ஸ் பிக்‌ஷன் வெப்சிரீஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Geek Girl (ஆங்கிலம்) – Netflix

Geek Girl

டெக்லான் ஓ’ட்வயர் இயக்கத்தில் எமிலி கேடே, ஜெமிமா ரூப்பர், சாரா பாரிஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Geek Girl’. பெண்ணின் ஜாலியான பள்ளி, கல்லூரி வாழ்கையைச் சொல்லும் இந்த காமெடியான வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Eric (ஆங்கிலம்) – Netflix

Eric

அபி மோர்கன் எழுத்தில் லூசி ஃபோர்ப்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Eric’. பெனடிக்ட் கம்பெர்பாட்ச், கேபி ஹாஃப்மேன், டான் ஃபோக்லர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

ஒரு நொடி (தமிழ்) – Aha

ஒரு நொடி

மணிவர்மன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தமன் குமார், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒரு நொடி’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Swatantrya Veer Savarkar (இந்தி/ மராத்தி) – Zee5

சாவர்க்கரின் வாழ்க்கையத் தழுவி எடுக்கப்பட்டுள்ளத் திரைப்படம் ‘Swatantrya Veer Savarkar’. இப்படத்தை ரன்தீப் ஹூடா இயக்கி நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The First Omen (ஆங்கிலம்) – Disney + Hotstar

The First Omen

அர்காஷா ஸ்டீவன்சன் இயக்கத்தில் நெல் டைகர் ப்ரீ, தவ்கீஃப் பர்ஹோம், ரால்ப் இன்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The First Omen’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே வெளியான ‘ஓமன்’ படத்தொடரின் முதல் பாகத்தின் முன்கதை.

The Last Rifleman (ஆங்கிலம்) – Jio Cinema

The Last Rifleman

டெர்ரி லோன் இயக்கத்தில் பியர்ஸ் ப்ரோஸ்னன், க்ளெமென்ஸ் போசி, ஜான் அமோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Last Rifleman’. ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் கதையான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.