இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
அதேவேளை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 613 (169,613) பேர் தோற்றினர்.
அவர்களில் ஒரு லட்சத்து 173, 444 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர்.
அதில் 10,484 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
இது தகைமை அடிப்படையில் நூற்றுக்கு 64.3% வீதமாகும். மேலும் 190 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கொரோனா தொற்று மற்றும் நாட்டில் நிலவிய பல்வேறு பொருளாதார மற்றும் பின்னடைவுகளைக் கொண்ட காலப்பகுதியில் பாடசாலை கல்வி செயற்பாடுகளை நெருக்கடியான சூழலில் மேற்கொண்டவர்கள்.
எனினும் இம்மாணவர்கள் சிறந்த அடைவு மட்டத்தை எட்டியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 64.3 வீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஆண் பரீட்சாத்திகளின் அடைவு மட்டம் குறைவாகவும் பெண் பரீட்சார்த்திகளின் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.