மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டுக்கான போட்டியில், 20 நாடுகள் நான்கு குழுக்களாக போட்டியிடவுள்ளன.
‘A’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
‘B’ பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
‘C’ பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினி மற்றும் உகண்டா ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.
‘D’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று (02), இரண்டு ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன்படி இன்று கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலும், பப்புவா நியூ கினியை எதிர்த்து மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடவுள்ளன.
இலங்கை அணி ‘D’ பிரிவில் பங்கேற்கும் ஆரம்ப சுற்றின் முதல் போட்டி தென்னாபிரிக்காவுக்கு எதிராக (நாளை) ஜூன் 03 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.