கயானா,
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், ‘சி’ பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், ‘டி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.