பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி குளோஸ்டெர் (MG Gloster) எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடலை ஜூன் 5 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாகவும் கூடுதல் வசதிகளை கொண்டதாகவும் வரவுள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுசூ MU-X மற்றும் வரவிருக்கும் ஃபோர்டு எவரெஸ்ட் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள குளோஸ்டெர் காரில் இரு விதமான மாறுபட்ட பவர் ஆப்ஷனை வெளிபடுத்துகின்றது.
163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இதிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
தோற்ற அமைப்பில் முன்பக்க கிரில் பெரிய அளவில் மாற்றங்களை பெற்றும், புதிய டிசைன் அலாய் வீல், இன்டிரியரில் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் இருக்கை நிறங்களிலும் மாறுபட்டிருக்கலாம்.
வரும் ஜூன் 5 ஆம் தைதி விற்பனைக்கு எம்ஜி மோட்டார் குளோஸ்ட்ரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.